தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Twitter For Porn: ஆபாச இணையமாகிறதா ட்விட்டர்? மஸ்கின் காசு பார்க்கும் தந்திரம்!

Twitter for Porn: ஆபாச இணையமாகிறதா ட்விட்டர்? மஸ்கின் காசு பார்க்கும் தந்திரம்!

Kathiravan V HT Tamil

Feb 21, 2023, 11:32 AM IST

"சிட்டுக்களாக ட்விட்டுக்களை கொட்டி வரும் ட்விட்டர் தளத்தை சிட்டுக்குருவி லேகியம் விற்கும் தளமாக மாற்றி காசுபார்க்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் மீது குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர் சைபர் வல்லுநர்களும், விவரம் அறிந்த நெட்டிசன்களும்"
"சிட்டுக்களாக ட்விட்டுக்களை கொட்டி வரும் ட்விட்டர் தளத்தை சிட்டுக்குருவி லேகியம் விற்கும் தளமாக மாற்றி காசுபார்க்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் மீது குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர் சைபர் வல்லுநர்களும், விவரம் அறிந்த நெட்டிசன்களும்"

"சிட்டுக்களாக ட்விட்டுக்களை கொட்டி வரும் ட்விட்டர் தளத்தை சிட்டுக்குருவி லேகியம் விற்கும் தளமாக மாற்றி காசுபார்க்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் மீது குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர் சைபர் வல்லுநர்களும், விவரம் அறிந்த நெட்டிசன்களும்"

கடந்தாண்டில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்தே சர்ச்சைகளின் நாயகன் எலான் மஸ்க்கை சுற்றி மேலும் பல சர்ச்சைகளில் சிட்டுக்குருவிகளாக ரவுண்ட் அடித்து வருகின்றன. ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய பிறகு எலான் மஸ்க் எடுத்த முடிவுகள் அந்நிறுவன அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் தலைமை செயல் அதிகாரி தொடங்கி பல்வேறு ஊழியர்கள் வரை அந்நிறுவனத்தை விட்டு வெளியேற்றத் தொடங்கினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Kharge About PM : ’இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் யார்?’ செய்தியாளர்களிடம் போட்டு உடைத்த மல்லிகார்ஜுன கார்கே!

Amit Shah: ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள்வதா?’ மண்ணின் மைந்தனை முதல்வர் ஆக்குவோம்! வி.கே.பாண்டியன் குறித்து கொந்தளித்த அமித்ஷா!

WhatsApp: வாட்ஸ்அப்பில் படிக்காத செய்திகளை விரைவில் அழிக்கலாம்: ஆப்ஷனின் சிறப்பம்சம் என்ன?

Kalasha Naidu: சமூக சேவையின் சாதனை: 10 வயதில் உலக அளவில் கலைப்படைப்பும் கருணையும் பாய்ச்சிய கலாஷா நாயுடு

100 பில்லின் டாலர் இழப்பு

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்தார், அவரின் டெஸ்லா நிறுவனம் சமீபகாலமாக சொதப்பி வருகிறது. ட்விட்டரை வாங்க அவர் செய்த அலப்பறை அவரை நஷ்டக்கணக்கில் விட்டுள்ளது. காலங்காலமாக ட்விட்டரில் விளம்பரம் கொடுத்து வந்த நிறுவனங்கள் அதனை நிறுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன.

சிக்கன சிகாமணி எலான் மஸ்க்

நியூயார்க்கில் உள்ள ட்விட்டர் அலுவலகம்

இதையெல்லாம் ஈடுகட்ட பணம் கொடுத்தால் புளூ டிக் என்ற வசதியை கொண்டு வந்த நிலையில் இந்த ஐடியாவை பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவும் காப்பி அடிக்க தொடங்கி உள்ளது. மேலும் நிறுவன செலவுகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் இயங்கி வந்த ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிட்டு பெங்களூருவில் மட்டுமே ட்விட்டர் நிறுவனம் இயங்கும் எனவும் மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து கொள்ளலாம் என்றும் கட் அண்ட் ரைட்டாக தெரிவித்துவிட்டார்.

ஆபாச படங்கள் ஊக்குவிப்பு

ட்விட்டரை வாங்கும்போது, கருத்து சுதந்திரத்திற்கான தளமாக என்றும் ட்விட்டர் இருக்கும் என்று வாய் அளக்க நீட்டி முழங்கி இருந்தார் எலான் மஸ்க். ஆனால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிட்டுக்களாக ட்விட்டுக்களை கொட்டி வரும் ட்விட்டர் தளத்தை சிட்டுக்குருவி லேகியம் விற்கும் தளமாக மாற்றி காசுபார்க்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் மீது சைபர் வல்லுநர்களும், விவரம் அறிந்த நெட்டிசன்களும் குற்றம்சாட்டத் தொடங்கி உள்ளனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நிறுவனத்தின் வருவாயை கூட்ட ஏன் ஆபாச படங்களை அனுமதிக்க கூடாது என ஒரு திட்டத்தை சொல்லி குண்டை தூக்கி போட்டுள்ளார் எலான்.

60% ஆபாச தேடல்கள்

இணையதளத்தை பொறுத்தவரை அதன் 60 சதவீத பயன்பாடு போர்ன் எனப்படும் ஆபாச படங்கள்தான் உள்ளது. நீங்கள் என்ன முயற்சி எடுத்தாலும் எப்படியாவது ஆபாச படங்கள் நுழந்துவிடும்.

டம்ப்ளர் (Tumblr) வலைப்பக்கம்

டம்ப்ளர் (Tumblr) எனும் வலைதளத்தை கலை ரீதியான குறும் வலைப்பூவாக ட்விட்டரை போல பயன்படுத்துவதற்காக உருவாக்கியநிலையில், ஐந்தே வருடங்களில் அது ஆபாச படங்கள் மற்றும் செக்ஸ்டிங் செய்யும் தளமாக உருவெடுத்தது. ஆனால் கொள்கை பிடிப்புள்ள டம்ப்ளர் நிறுவனமோ பல லட்சங்கள் செலவு செய்து ஆபாச குப்பைகளை நீக்கி வருகிறது.

ஒன்லி பேன்ஸ் நிறுவன படம்

ஆபாச தளமாக மாறிய ஒன்லி பேன்ஸ்

அதே போல் ஒன்லி பேன்ஸ் எனும் வலைதளம் தங்கள் திறன்களை வீடியோவாக பதிவு செய்து காட்டி மக்களிடம் பணம் வசூலிக்கும் paywalled Video என்ற முறையை அறிமுகப்பட்டுத்தி இருந்தது. இதில் ஒரு ஓவியர் தனது கலைத்திறனை வீடியோவாக வெளிக்காட்டுவார், அதனை ரசிக்கும் மக்கள் அவருக்கு லைவ் சாட்டிலேயே பணம் அனுப்ப முடியும்.

ஆனால் தற்போது இந்த தளம் பாலியல் தொழிலாளிகள் வீடியோ சாட் மூலம் வருமானம் பார்க்கும் தளமாக மாறிவிட்டது பெருங்கொடுமை. டம்பளர் போராடுகிறது. ஆனால் ஒன்லிபேன்ஸ் நிறுவனமோ இதை ஆபாச வலைதளமாகவே மாற்றிவிட்டது.

ட்விட்டரில் கமிஷன் வியாபாரம்

இந்த விஷயங்களை மனதில் வைத்துதான் நாம் ஏன் ட்விட்டரில் ஆபாச வீடியோக்களை அனுமதிக்க கூடாது என்ற திட்டத்தை எலான் மஸ்க் தீட்டி உள்ளார்.

மேலும் பணம்பார்க்கும் வகையில் ஒன்லி பேன்ஸ் செய்வது போல், வீடியோக்கள் காட்டுபவர்களுக்கு வரும் பணத்தில் ஒரு கமிஷன் வாங்கலாம். Paid DM முறையில் செக்ஸ்டிங் அனுமதித்து ஒரு கமிஷன் தொகையை பார்க்க கனவு கண்டு வருகிறார் செவ்வாய் கிரகத்திற்கு சேட்டிலைட் விட திட்டமிடும் நாயகன்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி