தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tn Medical Counselling : எம்பிபிஎஸ், பிடிஎஸ், நாளை அகில இந்திய கலந்தாய்வு தொடக்கம் – ஆன்லைனில் நடக்கிறது

TN Medical Counselling : எம்பிபிஎஸ், பிடிஎஸ், நாளை அகில இந்திய கலந்தாய்வு தொடக்கம் – ஆன்லைனில் நடக்கிறது

Priyadarshini R HT Tamil

Jul 19, 2023, 12:07 PM IST

TN Medical Counselling : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான அகில இந்திய கலந்தாய்வு வியாழக்கிழமை நாளை (ஜீலை 20ம் தேதி) இணைய வழியில் தொடங்குகிறது.
TN Medical Counselling : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான அகில இந்திய கலந்தாய்வு வியாழக்கிழமை நாளை (ஜீலை 20ம் தேதி) இணைய வழியில் தொடங்குகிறது.

TN Medical Counselling : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான அகில இந்திய கலந்தாய்வு வியாழக்கிழமை நாளை (ஜீலை 20ம் தேதி) இணைய வழியில் தொடங்குகிறது.

நீட் தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பதற்காக இந்தியளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு ஆகும். அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் அகில இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

2019ம் ஆண்டு முதல் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் பொது மருத்துவம் அல்லது பல் மருத்துவம் படிக்க முடியும்.

இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் 45 வினாக்கள் கேட்கப்பட்டு மொத்தம் 180 வினாக்கள் இடம்பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

ஆனால் தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் மூன்று முறை நீட் தேர்வை எழுத முடியும். இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் 3 முறையும், மற்ற மாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு நீட் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவன் 720க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். கவுன்சிலிங் பதிவுகள் முடிந்து ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டது. இதையடுத்து அகில இந்திய மருத்துவ கவுன்விலிங் நாளை துவங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி துவங்குகிறது.

நாடு முழுவதும் அரசு பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.

இந்தாண்டுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 6ம் தேதி நிறைவடைகிறது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9ம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31ம் தேதியும், காலி இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு செப்டம்பா் 21ம் தேதியும் நடைபெறும்.

தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வு ஜீலை 25ம் தேதி துவங்கும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி