Tamil Live News Updates (02.06.2023) : இன்றைய அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்
Tamil Live News Updates (02.06.2023) : இன்றைய அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்

Tamil Live News Updates : செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் இடங்களில் நடந்த ஐ.டி.ரெய்டு நிறைவு!

Jun 02, 2023, 04:45 PM IST

Tamil Live News Updates (02.06.2023) : இன்றைய அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்

Jun 02, 2023, 05:16 PM IST

அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

கடந்த 2021 முதல் 2023 வரை முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை ஆட்சிக் காலத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கிய பா.ஜ.க. அரசை எதிர்த்து அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தார்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

Jun 02, 2023, 04:45 PM IST

வருமானவரி சோதனை நிறைவு 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 8 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Jun 02, 2023, 04:22 PM IST

ஸ்டெர்லைட் ஆலை கழிவு அகற்றம் - ஆட்சியர் விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசே செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Jun 02, 2023, 04:22 PM IST

கோவையில் கனமழை

கோவை மாவட்டம் காந்திபுரம், சித்தாபுதூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Jun 02, 2023, 03:13 PM IST

தாம்பூல பையில் மது பாட்டில் - அபராதம் விதிப்பு

புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் மது பாட்டில் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், மதுபானம் வழங்கிய நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

Jun 02, 2023, 02:44 PM IST

உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Jun 02, 2023, 02:11 PM IST

2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Jun 02, 2023, 02:11 PM IST

அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 4ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். எனவே, வெயில் நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெளியே வர வேண்டாம். வெளியே சென்றாலும் அடிக்கடி தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.

Jun 02, 2023, 02:11 PM IST

அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

தமிழகத்தில் விசைத்தறிக் கூடங்களை நவீனமயமாக்க முதலீட்டு மானியம் வழங்கப்படவுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

Jun 02, 2023, 01:31 PM IST

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம்!

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது.

மாநிலத்தின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; இதையடுத்து கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் (FTO) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Jun 02, 2023, 01:29 PM IST

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி தொடர்பாகவும், பராமரிப்பு பணிகளை அரசே மேற்கொள்ள இருப்பது தொடர்பாகவும் ஆலை எதிர்ப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை 

Jun 02, 2023, 12:48 PM IST

கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் ஸ்டாலின்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார்.

Jun 02, 2023, 12:16 PM IST

என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன்- மு.க.ஸ்டாலின்

என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கலைஞருக்கும், அவரது புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கலைஞர்: கலைஞர் தொடாத துறையுமில்லை, தொட்டு துலங்காத துறையுமில்லை.

நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்; கலைஞர் இன்றும் வாழ்கிறார்; மக்கள் மனதில் ஆட்சி செய்கிறார் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

Jun 02, 2023, 12:14 PM IST

மேகதாது விவகாரம்: வைகோ கண்டனம்

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக்கொள்வதை ஏற்கவே முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்  தெரிவித்துள்ளார். 

Jun 02, 2023, 12:10 PM IST

பிரஜ் பூஷண் சரண்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷண் சரண்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகளின் பெற்றோர் அளித்த புகாரில் பிரஜ் பூஷண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் பிரஜ் பூஷண் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது .

Jun 02, 2023, 12:07 PM IST

என் உயிர் தோழனுக்கு இனிய பிறந்த நாள்-பாரதிராஜா

மொழி கடந்து

தேசம் கடந்து

கோடிக்கணக்கான

இதயங்களை தாலட்டி

அரை நூற்றாண்டாக

இசை மழையால்

ஆட்சி செய்துகொண்டிருக்கும்

என் உயிர் தோழனுக்கு

இனிய பிறந்த நாள்

வாழ்த்துக்கள்.

-பாரதிராஜா

Jun 02, 2023, 11:30 AM IST

ஆசிரியர்களுக்கு டெட் தகுதித்தேர்வு தேவை இல்லை -சென்னை உயர் நீதிமன்றம்!

2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தகுதித்தேர்வு தேவை இல்லை. ஊதிய உயர்வுக்கும் தகுதி தேர்வு அவசியமில்லை. தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

Jun 02, 2023, 10:42 AM IST

கோகுல்ராஜ் கொலை வழக்கு - இன்று தீர்ப்பு!

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில், யுவராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. யுவராஜ் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Jun 02, 2023, 10:38 AM IST

கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு.. மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

சேலம் ஓமலூர் பொறியியல் கல்லூரி தலித் மாணவர் கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாகும் வரையிலா ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Jun 02, 2023, 10:24 AM IST

இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன் - கமல்

திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன் என கமல் டுவிட் செய்துள்ளார்.

Jun 02, 2023, 10:12 AM IST

நாளை முதல் செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சி!

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை முதல் செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சி. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

Jun 02, 2023, 10:05 AM IST

இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் 80வது பிறந்தநாளான இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்

Jun 02, 2023, 09:48 AM IST

பேனர் விபத்து - 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு!

கோவை கருமத்தம்பட்டியில் பேனர் பலகை சரிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் விழுந்து 3 பேர் ஒப்பந்ததாரர் பாலாஜி, பழனிச்சாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்கு.

Jun 02, 2023, 09:47 AM IST

பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

பூந்தமல்லி அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிறிய சரக்கு வாகனம் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து. 4 வாகனங்கள் மோதலை தொடர்ந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Jun 02, 2023, 09:01 AM IST

ஜடேஜா ஸ்டோரி வைத்த தமிழ் பாடல் 

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்த ஐடேஜா 

Jun 02, 2023, 08:43 AM IST

இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

திரையிசை சகாப்தம் ஒன்று 8 தசாப்தங்களை கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இளையராஜா என்ற 5 எழுத்துக்கள்தான் திரையுலகின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர். என் அன்புக்கும், ஆச்சர்யத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.

Jun 02, 2023, 08:16 AM IST

சிறையில் சிக்கிய செல்ஃபோன், கஞ்சா!

புழல் சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் விஜயராஜ் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த செல்போன், 2 பேட்டரிகள், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. கொடியரசன் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Jun 02, 2023, 08:08 AM IST

கோகுல்ராஜ் கொலை இன்று தீர்ப்பு 

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. 5 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கோகுல்ராஜ் தாயார் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!

Jun 02, 2023, 08:06 AM IST

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆலடியில் மரக்கன்றுகள் நட்ட ஆளுனர்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆளுனர் ஆர்.என்.ரவி ஆவடியில் உள்ள ஆர்டினன்ஸ் டிப்போவில் மரக்கன்றுகளை நட்டார்.

Jun 02, 2023, 07:37 AM IST

சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில் இதை தெரிவித்துள்ளார்.

Jun 02, 2023, 07:18 AM IST

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை? 

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Jun 02, 2023, 07:01 AM IST

377வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை 

சென்னையில் 377வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்கப்படுகிறது  

Jun 02, 2023, 06:43 AM IST

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவங்குகிறது. சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினை வெளியிடப்படுகிறது.

Jun 02, 2023, 06:43 AM IST

குடியரசுத் தலைவரை சந்திக்கும் விவசாயிகள் 

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசுத் தலைவரை சந்திக்க விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. டெல்லி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும்.

    பகிர்வு கட்டுரை