தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Adani-hindenburg Case: அதானி குழும மோசடி விவகாரம் - ஆக.14ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Adani-Hindenburg case: அதானி குழும மோசடி விவகாரம் - ஆக.14ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

May 17, 2023, 01:39 PM IST

அதானி குழும புகார் தொடர்பான ஆய்வறிக்கையை வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி குழும புகார் தொடர்பான ஆய்வறிக்கையை வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி குழும புகார் தொடர்பான ஆய்வறிக்கையை வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன் பார்க் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் மோசடி செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

மொரிசியஸ் தீவில் உள்ள ஷெல் நிறுவனங்களின் உதவியோடு அதானே குழுமத்தைச் சேர்ந்த கௌதம் அதானி தன்னுடைய நிறுவனத்தின் விலையைப் போலியாகப் பங்குச்சந்தையில் நிர்ணயித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அதானி நிறுவனத்தின் பங்குகள் இந்தியாவில் சரிவை சந்தித்தன. பின்னர் இது அரசியல் சிக்கலாகவும் உருவெடுத்தது. பிரதமர் மோடிக்கு கௌதம் அதானி மிகவும் நெருக்கமானவர். அவரது குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டது உண்மையா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செபி அமைப்பை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. இதுகுறித்து விசாரணையைத் தொடங்கிய செபி அமைப்பு இன்னும் பல தகவல்களைக் கேட்டுப் பெற வேண்டும் எனக் கூறி ஆறு மாத காலம் அவகாசம் கேட்டிருந்தது.

ஹிண்டன் பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 முக்கியமான பரிமாற்றங்கள் புரிந்து கொள்ளவே கடினமாக இருப்பதாகவும், இது தொடர்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த 11 ரெகுலேட்டர்களை அணுகியிருப்பதாகவும் செபி தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பங்குச் சந்தைகள் நடந்த குடலுப்படிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதில் ஈடுபட்டிருந்த 51 நிறுவனங்களில் அதானி நிறுவனம் இல்லை என்பதைச் செபி அமைப்பு விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் அதானி குழுமத்தின் புகார் தொடர்பான ஹிண்டன் பர்க் அறிக்கையை விரைவில் ஆய்வு செய்து வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு முன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி