தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Singappenney: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர் கமலா ஹாரிஸ்!

singappenney: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர் கமலா ஹாரிஸ்!

Jan 05, 2024, 05:45 AM IST

2021 ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடனுடன் கமலஹாரிஸ் துணை துணை அதிபராக பதவியேற்றார். இதன் மூலம் உலக அரசியல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் தனது பெயரை நிரந்தரமாக எழுதி உள்ளார் என்றால் மிகையல்ல
2021 ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடனுடன் கமலஹாரிஸ் துணை துணை அதிபராக பதவியேற்றார். இதன் மூலம் உலக அரசியல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் தனது பெயரை நிரந்தரமாக எழுதி உள்ளார் என்றால் மிகையல்ல

2021 ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடனுடன் கமலஹாரிஸ் துணை துணை அதிபராக பதவியேற்றார். இதன் மூலம் உலக அரசியல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் தனது பெயரை நிரந்தரமாக எழுதி உள்ளார் என்றால் மிகையல்ல

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதைப்போல அரசியல் எதற்கு என்று பேசப்பட்ட காலமும் இருந்தது. ஆனால் இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டம் தொடங்கி தங்களுக்கு கிடைந்த வாய்ப்பை பயன்படுத்தி காலம் காலமாக அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் களமாடிய பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அப்படியான பெண் ஆளுமைகளை திரும்பி பார்க்கும் ஒரு முயற்சியே இது. அந்தவகையில் இன்று தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்து இங்கு பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சியாமளா கோபாலனுக்கும், ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் ஜேவுக்கும் பிறந்தவர் கமலா தேவி ஹாரிஸ். கடந்த 1964ல் கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில் பிறந்தார். அவரது சகோதரியின் பெயர் மாயா தேவி ஹாரிஸ். கமலா ஹாரிஸ் தனது தாய் வழி சொந்தங்களை காண தமிழகம் வந்ததுண்டு. அவருக்கு கொஞ்சம் தமிழ் கூட தெரியும்.

கல்வி

ஹாரிஸ் கியூபெக்கில் உள்ள வெஸ்மவுண்ட் உயர்நிலைபள்ளியில் பயின்றார். மேற்படிப்பை ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் தொடந்தார். அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தேர்ச்சி அடைந்தார்.

பின்னர் 1989ல் கலிபோர்னியாவுக்கு திரும்பியவர் ஹேஸ்டிங்கஸ் காலேஜ் ஆப் லாவில் ஜூரிஸ் டாக்டர் பட்டம் பெற்றார். 1990 முதல் 1998 வரை அமேடாகவுண்டில் துணை மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார்.

2000ம் ஆண்டில் சமூக மற்றும் சுற்றுப்புற பிரிவின் தலைவராக கமலா நியமிக்கப்பட்டார். 2003ல் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்ட ஹாரிஸ் டெரன்ஸ் என்பவரை தோற்கடித்து கமலா பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் ஆனார். அந்த பதவிக்கு வந்த முதல் தெற்காசிய மற்றும் கருப்பின பெண்ணாக ஹாரிஸ் அடையாளப்படுத்தப்பட்டார். பின்னர் 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் நகர வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் கலிபோர்னியா மாவட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேசிய வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றில் 2012 களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டு நடந்த கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் மாவட்ட வழக்கறிஞரான ஸ்டீவ் கூலியை எதிர்த்து கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

3 ஜனவரி 2011ல் கமலா அட்டர்னி ஜெனராலாக பதவி ஏற்றார். இதனால் முதல் ஜமைக்கா அமெரிக்க பெண்மணி மற்றும் கலிபோர்னியாவின் முதல் இந்திய அமரிக்க அட்டர்னி ஜெனரல் என்ற பெருமையை பெற்றார்.

இதை அடுத்து 2014ஆம் ஆண்டு நவம்பரில் ரொனால்ட் கோல்டுக்கு எதிராக போட்டியிட்டு மீண்டும் வெற்றியை பெற்றார். 2016 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த அமெரிக்க செனட் தேர்தலில் கமலா 62% வாக்குகளை பெற்று லோரெட்டா சான்செஸை தோற்கடித்தார். பின்னர் 3 ஜனவரி 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் செனட்டராக பதவி ஏற்றுக்கொண்டார்.

11 ஆகஸ்ட் 2020இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் போட்டியிட்டார். அவர் துணை அதிபராக கமலா ஹாரிஸை அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜோபிடன் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடனுடன் கமலஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார்.

இதன் மூலம் உலக அரசியல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் தனது பெயரை நிரந்தரமாக எழுதி உள்ளார் என்றால் மிகையல்ல

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி