தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pakistan: பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்-3 ராணுவ வீரர்கள் பலி

Pakistan: பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்-3 ராணுவ வீரர்கள் பலி

Manigandan K T HT Tamil

Feb 12, 2023, 10:53 AM IST

Pakistan: பாகிஸ்தானின் வஜிரிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
Pakistan: பாகிஸ்தானின் வஜிரிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

Pakistan: பாகிஸ்தானின் வஜிரிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்றனர். அவர்களுடன் மர்ரி பெட்ரோலியம் கம்பெனி ஊழியர்கள் உடன் சென்றனர்.

அப்போது ரிக்ஷா ஒன்று சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்தது. திடீரென அந்த ரிக்ஷா ராணுவ வீரர்கள் வாகனத்தின் மீது மோதியது. இதைத் தொடர்ந்து ரிக்ஷாவில் இருந்து வெடிபொருள் வெடித்துச் சிதறியது. இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

இதனிடையே, பலூசிஸ்தானில், கோலு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் எல்லைப் படையின் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.

கோலு மாவட்டத்தின் கஹான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பங்கேற்ற ராணுவ வீரர்களின் வாகனம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

அடுத்த செய்தி