தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவையில் முக்கிய மாற்றம்!

Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவையில் முக்கிய மாற்றம்!

Karthikeyan S HT Tamil

May 18, 2023, 11:05 AM IST

Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பதவி ஏற்றது. அதன் பிறகு ஒரு சில முறைகள் மத்திய அமைச்சரவையில் சில மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில்,பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் அவர் தற்போது சட்டத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புவி அறிவியல் அமைச்சகத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வகித்து வந்தார்.

நீதிபதிகள் நியமனம் குறித்து பல சர்ச்சை கருத்துக்கள் கூறி வந்த நிலையில், கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி