தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Arun Gandhi Passes Away : மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்!

Arun Gandhi Passes Away : மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்!

Divya Sekar HT Tamil

May 02, 2023, 12:10 PM IST

கோல்ஹாப்பூரில் மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி(83) காலமானார்.
கோல்ஹாப்பூரில் மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி(83) காலமானார்.

கோல்ஹாப்பூரில் மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி(83) காலமானார்.

மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாப்பூரில் காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி(83) காலமானார். காந்தியின் மகனான மணிலால் காந்திக்கு பிறந்தவர் அருண் மணிலால் காந்தி.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

ஏப்ரல் 14, 1934-ல் மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்குப் பிறந்த அருண் காந்தி, ஒரு ஆர்வலராக தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார். எனினும் `தனது தாத்தாவின் துறவு வாழ்க்கை முறையைத் தவிர்த்துவிட்டார்.

இந்தியா-அமெரிக்க நட்புணர்வு சங்க ஆர்வலராக இருந்து வந்த அருண் காந்தி இந்துவாக இருந்தபோதும் உலகவாதியாக செயல்பட்டவர்.

பௌத்த சமய, இந்து சமய, இசுலாமிய தத்துவங்களால் கவரப்பட்டவர். கடந்த 1987ஆம் ஆண்டு மனைவி சுனந்தாவுடன் அமெரிக்காவில் குடியேறி மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். 

எழுத்தாளரான இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை அமெரிக்காவில் பரப்பினார். 2016 ஆம் ஆண்டு வரை, அருண் காந்தி நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் வசித்து வந்தார். பின்னர் இந்தியாவுக்கு வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக இன்று கோலாப்பூரில் காலமானார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி