தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Assembly Elections 2023: கர்நாடக தேர்தலில் 5,102 வேட்புமனுக்கள் தாக்கல்

Karnataka Assembly Elections 2023: கர்நாடக தேர்தலில் 5,102 வேட்புமனுக்கள் தாக்கல்

Priyadarshini R HT Tamil

Apr 21, 2023, 09:40 AM IST

Nominations Filed in Karnataka : கர்நாடக தேர்தலில் 5.102 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,632 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
Nominations Filed in Karnataka : கர்நாடக தேர்தலில் 5.102 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,632 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

Nominations Filed in Karnataka : கர்நாடக தேர்தலில் 5.102 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,632 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

3,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மொத்தம் 5,102 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வியாழக்கிமையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. வரும் மே 10ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

3,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மொத்தம் 5,102 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வியாழக்கிமையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. வரும் மே 10ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்றது. மொத்த வேட்புமனுக்களில், 4,710 வேட்புமனுக்களை 3,327 ஆண் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். 391 வேட்புமனுக்களை 304 பெண் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். மாற்றுப்பாலினத்தவரால் ஒரு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கர்நாடக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

707 வேட்புமனுக்களை பாஜகவைச் சேர்ந்தவர்களும், 651 காங்கிரஸ் உறுப்பினர்களும், 455 மனுக்களை ஜேடிஎஸ் தொண்டர்களும், மற்றவை சுயேட்சை மற்றும் இதர சிறுசிறு கட்சியினரும் தாக்கல் செய்துள்ளனர். ஒருவர் 4 வேட்புமனுக்கல் வரை தாக்கல் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று, 1,691 வேட்பாளர்கள் 1,934 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் சில முக்கிய தலைவர்களும் அடங்குவர்.

வேட்புமனு தாக்கல் முடிய சிறிது நேரம் முன்னர், காங்கிரஸ் எம்பியும், கர்நாடக காங்கிரஸ் தலைவரும், அவரது மூத்த சகோதரருமான டி.கே.சிவகுமார் வேட்புமனுதாக்கல் செய்தது ஆச்சர்யமாக இருந்தது. அவர் கனகபுரா தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். சிவகுமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் இவரது மனு ஏற்கப்படால் காங்கிரஸ் வேட்பாளரை இழக்காது என்பதால்தான் இந்த ஏற்பாடு என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஹசனில் ஸ்வரூப் தனது வேட்பு மனுவை அவரது குடும்பத்தினருடன் வந்து தாக்கல் செய்தார். அவர் முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

புதனன்று இரவுதான் ஷிமோகாவின் பாஜக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சன்னபாசப்பா அவரது வேட்புமனுவை பாஜக மூத்த தலைவர் ஏக்கேஸ்வரப்பா எம்எல்ஏ உடன் வந்து தாக்கல் செய்தார்.

சுயேட்சை எம்பி சுமலதா அம்பரீஷ் மற்றும் அமைச்சர் சி.என். அஷ்வத் நாராயண்ணுடன் வந்து பாஜக மாண்டிய வேட்பாளர் அசோக் ஜெயராமன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை வேட்பாளர்கள் ஏப்ரல் 24ம் தேதி திரும்பப்பெறலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி