தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Gun Boy: அடேய் டயப்பர் பையா... பொம்மை இல்லடா துப்பாக்கி...! பதற வைக்கும் வீடியோ

Gun Boy: அடேய் டயப்பர் பையா... பொம்மை இல்லடா துப்பாக்கி...! பதற வைக்கும் வீடியோ

Jan 17, 2023, 11:24 AM IST

அமெரிக்காவில் டயப்பர் அணிந்த சிறுவன் துப்பாக்கியுடன் சுற்றி வரும் காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி உள்ளது.
அமெரிக்காவில் டயப்பர் அணிந்த சிறுவன் துப்பாக்கியுடன் சுற்றி வரும் காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி உள்ளது.

அமெரிக்காவில் டயப்பர் அணிந்த சிறுவன் துப்பாக்கியுடன் சுற்றி வரும் காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி உள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பரவலாக உள்ளது. இதைக்கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் குடியரசுக்கட்சி அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு துப்பாக்கி கலாச்சாரத்தை முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Vladimir Putin: ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் மிஷுஸ்டினை மீண்டும் விளாடிமிர் புதின் நியமித்தார்

Swift 2024: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல் இந்தியாவில்அறிமுகம்: விலை எவ்வளவு, பிற அம்சங்களை அறிவோம் வாங்க

Sandeshkhali case: சந்தேஷ்காலி வழக்கில் திடீர் திருப்பம்.. பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற பெண்

Bengaluru:பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை: இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதற்கிடையில் அவ்வப்போது அமெரிக்காவில் நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் மனித உயிர்கள் பலியாகுவது தொடர்கதையாக மாறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பீச் குரேவ் நகரத்தில் டயப்பர் போட்ட சிறுவன் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வலம் வருவது போன்ற காட்சிகள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுவன் ஒருவன் துப்பக்கியுடன் முகப்பு அறையில் வலம் வருகிறான்.

அந்த வீடியோவில் சிறுவன் துப்பாக்கியை கையில் வைத்து முன்னும் பின்னும் ஆட்டியபடியும் அவ்வப்போது சுட்ட படியும் செல்கிறான். ஒரு முறை அவன் தன்னை நோக்கி சுடுவது போல் துப்பக்கியை காட்டுவது காண்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது.

ஆனால் சிறுவன் விளையாடிய அந்த துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்படவில்லை. இதனால் அவன் பல முறை சுட்டாலும் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

இதை சிறுவனின் பக்கத்து வீட்டில் இருந்த பெண் கண்காணிப்பு கேமரா வழியாக கவனித்து உள்ளார்.

அந்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்த அவர் இதனால் தான் இண்டியானாவில் இருக்க பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய சோதனையில் மூலம் மூடப்பட்டு இருந்த மேஜையின் பின்புறம் சிறுவன் விளையாடிய துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் ஆத்திரம் அடைந்த 6 வயது சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுடத்தொடங்கினான். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனயில் அனுமதிப்பட்டார்.

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு 610 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகி உள்ளது. 2021ம் ஆண்டு 690 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகி உள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் 610 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகின. அமெரிக்காவில் தொடர்ந்து அறங்கேறி வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பேசு பொருளாக மாறி உள்ளது. இதனால் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டாபிக்ஸ்