தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Gopal Krishna Gokhale: இந்திய சேவகர்கள் சங்கத்தை தொடங்கிய தலைவர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள்

HBD Gopal Krishna Gokhale: இந்திய சேவகர்கள் சங்கத்தை தொடங்கிய தலைவர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள்

Manigandan K T HT Tamil

May 09, 2024, 05:00 AM IST

Gopal Krishna Gokhale: குடும்பம் ஏழையாக இருந்தாலும் இவருக்கு ஆங்கிலக் கல்வியை இவரது குடும்பம் கிடைக்கச் செய்தது. இதன்காரணமாக அவர் கிளெர்க் வேலைக்கு சேர்ந்தார். கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் தான் அவர் படித்தார். (@INCIndia)
Gopal Krishna Gokhale: குடும்பம் ஏழையாக இருந்தாலும் இவருக்கு ஆங்கிலக் கல்வியை இவரது குடும்பம் கிடைக்கச் செய்தது. இதன்காரணமாக அவர் கிளெர்க் வேலைக்கு சேர்ந்தார். கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் தான் அவர் படித்தார்.

Gopal Krishna Gokhale: குடும்பம் ஏழையாக இருந்தாலும் இவருக்கு ஆங்கிலக் கல்வியை இவரது குடும்பம் கிடைக்கச் செய்தது. இதன்காரணமாக அவர் கிளெர்க் வேலைக்கு சேர்ந்தார். கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் தான் அவர் படித்தார்.

கோபால கிருஷ்ண கோகலே ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

கோகலே, இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் இந்திய பணியாளர்கள் சங்கத்தின் நிறுவனரும் ஆவார்.

பிறப்பு

1866ஆம் ஆண்டு மே 9ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவான பாம்பே நகரில் பிறந்தார் கோபால கிருஷ்ண கோகலே. இவர், சித்பவன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கல்வி

குடும்பம் ஏழையாக இருந்தாலும் இவருக்கு ஆங்கிலக் கல்வியை இவரது குடும்பம் கிடைக்கச் செய்தது. இதன்காரணமாக அவர் கிளெர்க் வேலைக்கு சேர்ந்தார்.

கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் தான் அவர் படித்தார்.

1889ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் கோகலே உறுப்பினரானார். பால கங்காதர திலகர், தாதாபாய் நவுரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், அன்னி பெசன்ட் ஆகியோர் இவரது காலத்தில் வாழ்ந்த ஆகச் சிறந்த அரசியல் தலைவர்கள் ஆவர்.

கோபால கிருஷ்ண கோகலே, பிரிட்டன் அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார்.

தனது குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அவை வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல் ஆகியவை ஆகும்.

அரசியல்

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார். சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்.

காந்திஜியின் ஆலோசகர்

மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான ஆலோசகராக இருந்து வந்தார். 1912 ஆம் ஆண்டில் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளைப் பெற்றார்.

கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியல் ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். இதில் வெளிநாட்டுப் பயணங்களும் அடங்கும்.

1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி கோகலே, 49வது வயதில் காலமானார்.

கோகலேவின் வழிகாட்டி, நீதிபதி எம்.ஜி. ரானடே சர்வஜனிக் சபா ஜர்னலைத் தொடங்கினார். கோகலே அவருக்கு உதவினார். இந்தியாவின் நிதி நிலை குறித்து வெல்பி கமிஷன் முன் கோகலே தாக்கல் செய்த வாக்குமூலம் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றது. மத்திய சட்ட மேலவையில் பட்ஜெட் குறித்த அவரது உரைகள் முழுமையான புள்ளிவிவர பகுப்பாய்வுடன் தனித்தன்மை வாய்ந்தவை. காரணம் சொல்லி முறையிட்டார். இந்தியாவில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் தொடக்கமான மோர்லி-மிண்டோ சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

இவரை கவுரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையையும் மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி