தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Flight : விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்ற போதை பயணி – நடுவானில் பரபரப்பு

Flight : விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்ற போதை பயணி – நடுவானில் பரபரப்பு

Priyadarshini R HT Tamil

Apr 08, 2023, 11:03 AM IST

Indigo AirLines: போதையில் பயணி ஒருவர் இண்டிகோ விமானத்தில் அவசரகால கதவுகளை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச்சம்பவம் டெல்லி-பெங்களுரு இண்டிகோ விமானத்தில் நடந்தது.
Indigo AirLines: போதையில் பயணி ஒருவர் இண்டிகோ விமானத்தில் அவசரகால கதவுகளை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச்சம்பவம் டெல்லி-பெங்களுரு இண்டிகோ விமானத்தில் நடந்தது.

Indigo AirLines: போதையில் பயணி ஒருவர் இண்டிகோ விமானத்தில் அவசரகால கதவுகளை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச்சம்பவம் டெல்லி-பெங்களுரு இண்டிகோ விமானத்தில் நடந்தது.

பயணி ஒருவர் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில், விமானத்தின் அவசர கால கதவுகளை திறக்க முயன்ற மற்றுமொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 40 வயதான போதை பயணி இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றதாக கூறப்பட்டதாக ஏஎன்ஜ செய்தி வெளியிட்டுள்ளது. விமான நிறுவன அலுவலக தகவல்படி இந்த சம்பவம் டெல்லி – பெங்களூரூ விமானத்தில் நடைபெற்றது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

விமானம் 6இ 308 டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெள்ளி காலை 7.56 மணிக்கு புறப்பட்டது. 

டெல்லி-பெங்களுரூ சென்ற இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி, போதை நிலையில், அவசர கால கதவை திறக்க முயன்றதால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என இண்டிகோ தெரிவித்துள்ளது.   

பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பதில் உறுதியாக இருந்தோம். விமானத்தில் இருந்தவர்கள் உடனடியாக விமானி தகவலை தெரிவித்தோம். போதையில் விமான விதிமுறைகளை மீறிய பயணிக்கும் எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கினோம். 

பெங்களூருவில் விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த நபர் சிஐஎஸ்எஃப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை துவங்கப்பட்டது. 

இதுபோன்ற அசம்பாவிதங்கள் இந்திய விமானங்களில் அதிகரித்து வருகின்றன. 2022ம் ஆண்டு இதுபோன்ற 6 சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் 2023ம் ஆண்டு முதல் மூன்று மாதத்திற்குள் 8 சம்பவங்கள் இதுபோல் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

அண்மையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங், 10 பேருக்கு மார்ச் 15ம் தேதி வரை விமானத்தில் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் முறையே 60 மற்றும் 63 பேருக்கு பறக்க தடை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு முன்னதாக எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. அதையும் மீறி இவர்கள் நடந்துகொண்டதால் இந்த தடை அமல்படுத்தப்பட்டது.

அண்மையில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, எதிர்பாராதவிதமாக சென்னை-திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவுகளை திறந்தார். கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி