தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Arvind Kejriwal: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Karthikeyan S HT Tamil

Mar 28, 2024, 04:45 PM IST

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21 ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்ந்து 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாமல் இருந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bengaluru:பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை: இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Indian Army: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 40 மணி நேரம் நீடித்த என்கவுன்டர் முடிந்தது: இந்திய ராணுவம்

HBD Gopal Krishna Gokhale: இந்திய சேவகர்கள் சங்கத்தை தொடங்கிய தலைவர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள்

Haryana: ’ஹரியானாவில் பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸை ஆதரிக்க ரெடி!’ 10 எம்.எல்.ஏக்களை கொண்ட ஜேஜேபி கட்சி அறிவிப்பு!

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று (மார்ச் 28) வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையில், அமலாக்கத் துறையால் தான் விசாரணை எதுவுமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கை தனது அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டு கெஜ்ரிவால் நேற்று (மார்ச் 27) டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தற்போதைக்கு எந்த நிவாரணமும் அளிக்க முடியாது என்று கூறியிருந்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை ஒரு வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், இன்று அவரை அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தியது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை (ED) காவலை ஏப்ரல் 1 வரை நீட்டித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது. டெல்லி முதல்வர் திங்கள்கிழமை வரை காவலில் இருப்பார். அதன் பின்னர் இந்த வழக்கின் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் நீதிமன்ற பெஞ்ச் முன் மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமலாக்கத் துறையால் விசாரித்து வரும் டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காவலை நீட்டிக்க டெல்லி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படும் நான்காவது ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ஆவார்.

டெல்லி முதல்வரின் காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத் துறை, கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலரை கெஜ்ரிவால் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று வாதிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவுக்கு சொந்தமான மொபைல் போன்களில் ஒன்றில் உள்ள தரவு பிரித்தெடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், மார்ச் 21 ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மற்ற 4 டிஜிட்டல் சாதனங்களின் தரவு இன்னும் பிரித்தெடுக்கப்படவில்லை. ஏனெனில் கைது செய்யப்பட்டவர் தனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் கடவுச்சொல் / உள்நுழைவு சான்றுகளை வழங்க நேரம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை இயக்குநரகம் தனது புதிய ரிமாண்ட் மனுவில், கெஜ்ரிவாலிடம் நடத்திய விசாரணையின் போது, அவரது அறிக்கைகள் ஐந்து நாட்களில் பதிவு செய்யப்பட்டதாகவும், அவர் "மழுப்பலான பதில்களை அளித்தார்" என்றும் கூறி இருக்கிறது.

இந்த வழக்கில் ஏற்கெனவே முன்னாள் துணை முதல்கர் மணிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்