தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress Candidate Dies: ராஜஸ்தான் காங்கிரஸ் வேட்பாளர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழப்பு

Congress candidate dies: ராஜஸ்தான் காங்கிரஸ் வேட்பாளர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழப்பு

Manigandan K T HT Tamil

Nov 15, 2023, 11:52 AM IST

Rajasthan assembly polls: வேட்பாளர் கூனார் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவமனை வழங்கிய இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ANI)
Rajasthan assembly polls: வேட்பாளர் கூனார் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவமனை வழங்கிய இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajasthan assembly polls: வேட்பாளர் கூனார் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவமனை வழங்கிய இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் கரன்பூர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனார், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கட்சித் தலைவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர். அவருக்கு வயது 75.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

கரன்பூரின் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த கூனார், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) முதியோர் மருத்துவப் பிரிவில் நவம்பர் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

கூனார் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்த நோயாலும் அவதிப்பட்டு வந்தார்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மத்திய பிரதேசத்தில் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை "விலைக்கு வாங்கினர்" என்றும் "ஆட்சியை எங்களிடம் இருந்து திருடினர்" என்றும் காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். 2020 இல் கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த 22 எம்.எல்.ஏக்களின் கிளர்ச்சியைக் குறிப்பிட்டு, மக்களின் குரல் பாஜகவால் "நசுக்கப்பட்டது" என்று ராகுல் காந்தி கூறினார்.

2018 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 114 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்ற பிறகு காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. ஆனால், கமல்நாத் முதல்வராக பதவியேற்று 15 மாதங்கள் ஆன நிலையில், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.

"கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதன் மூலம், உங்கள் முடிவு, உங்கள் இதயத்தின் குரலை பாஜக தலைவர்கள், பிரதமரால் நசுக்கியது. நீங்கள் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 145 முதல் 150 இடங்களில் வெற்றி பெறும் என்றார் ராகுல் காந்தி.

வரும் 17ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

 

 

 

Google News: https://bit.ly/3onGqm9 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

அடுத்த செய்தி