தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியத்தால் கழுவிய மாணவர்கள்; கர்நாடகாவில் பரபரப்பு!

நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியத்தால் கழுவிய மாணவர்கள்; கர்நாடகாவில் பரபரப்பு!

Karthikeyan S HT Tamil

Aug 09, 2023, 11:10 AM IST

Actor Prakash Raj: கர்நாடகாவில் நடைபெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்ட நிகழ்ச்சி அரங்கை பாஜக மாணவ அமைப்பினர் பசு மாட்டின் கோமியத்தை வைத்து சுத்தம் செய்தது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
Actor Prakash Raj: கர்நாடகாவில் நடைபெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்ட நிகழ்ச்சி அரங்கை பாஜக மாணவ அமைப்பினர் பசு மாட்டின் கோமியத்தை வைத்து சுத்தம் செய்தது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Actor Prakash Raj: கர்நாடகாவில் நடைபெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்ட நிகழ்ச்சி அரங்கை பாஜக மாணவ அமைப்பினர் பசு மாட்டின் கோமியத்தை வைத்து சுத்தம் செய்தது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் இணைந்து திரையரங்கு, சினிமா, சமுதாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினர். இதில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், பேராசிரியர் சந்திரசேகர் அய்யா, சமூக ஆர்வலர் கே.எல்.அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

இதனிடையே, தனியார் அமைப்புகளுக்கு கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக உறுப்பினர்களும், பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்கள் பிரகாஷ்ராஜிடம் இருந்து கற்று கொள்ள எதுவும் இல்லை எனக் கூறி பாஜகவினரும், பாஜக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் கோஷங்களை எழுப்பினர்.

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கல்லூரிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ள ஐந்து திட்டங்களை ஆதரித்து பேசினார். காங்கிரஸால் தொடங்கப்பட்ட திட்டங்கள் கர்நாடக மக்களுக்கு பயனளிக்கின்றன என்றார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். 

பிரதமர் மோடியின் திட்டங்கள் நாடு முழுவதும் தோல்வியடைந்துவிட்டன, அதைப் பற்றி யார் பேசுவார்கள் என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்கும் அரசாங்கங்கள் பற்றியும் நடிகர் பேசினார். பாடப்புத்தகங்களை மாற்றுவது மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரகாஷ்ராஜ் வெளியே சென்ற பின்னர், கருத்தரங்கு நடந்த அரங்கை பாஜக மாணவர் அமைப்பினர் சிலர், பசு மாட்டின் கோமியத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர்‌. பாஜக மாணவர் அமைப்பினர் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி