தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Andhra Accident : ஐயோ பரிதாபம்.. கார், லாரி மீது மோதி விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி!

Andhra Accident : ஐயோ பரிதாபம்.. கார், லாரி மீது மோதி விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி!

Divya Sekar HT Tamil

Jun 12, 2023, 10:50 AM IST

விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டம் நல்லஜர்லா மண்டலத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு புறப்பட்ட கார் நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற லாரி மீது பலமாக மோதியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு வயது குழந்தையும் இரண்டு பெண்களும் அடங்குவர். இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. 

அந்த கார் எந்த அளவுக்கு லாரியின் அடியில் சென்றிருக்கிறது என்பதிலேயே கார் வேகத்தின் அளவைப் புரிந்து கொள்ளலாம். முந்திச் செல்லும் போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்கள் அனைவரும் ராஜமுந்திரியில் ஒரு சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க புறப்பட்டு வந்ததாக தெரிகிறது.

விபத்து நடந்த இடம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்த உடல்கள் மீட்கப்பட்டன. அவர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்தவரின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமே விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.

இதே போல ஆந்திராவில் நடந்த மற்றொரு விபத்தில் இருவர் உயிரிழந்தனர், திருப்பதியில் இருந்து அஞ்சேரம்மா கோவில் நோக்கி பக்தர்கள் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது வடமலைப்பேட்டை பகுதியில் சென்ற போது புத்தூரில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பால் வேணும் பயணிகள் வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இறந்தவர்கள் கிரிஜம்மா மற்றும் ரேவந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பயணிகள் வேன் டிரைவரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி