தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bsnl: 5ஜி சேவை...பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட்!

BSNL: 5ஜி சேவை...பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட்!

Feb 06, 2023, 01:39 PM IST

உலகத் தரம் வாய்ந்த 4ஜி சேவையை பிஎஸ்என்எல் சேவையை கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவித்த நிலையில், 5ஜி சேவையையும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் நிர்வாகிக்கப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளுக்கு 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு உலகத் தரத்துடன் செயல்படக்கூடிய 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்த சேவையை 28 ஆயிரம் கிராமப்புற பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Vladimir Putin: ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் மிஷுஸ்டினை மீண்டும் விளாடிமிர் புதின் நியமித்தார்

Swift 2024: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல் இந்தியாவில்அறிமுகம்: விலை எவ்வளவு, பிற அம்சங்களை அறிவோம் வாங்க

Sandeshkhali case: சந்தேஷ்காலி வழக்கில் திடீர் திருப்பம்.. பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற பெண்

Bengaluru:பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை: இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் மனிதவள மேம்பாடு இயக்குநர் அரவிந்த் வந்நெர்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூரியதாவது: "இன்னும் ஓர் ஆண்டுக்குள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4ஜி மேம்படுத்தப்பட்ட சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதேபோல் விரைவில் 5ஜி சேவையும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

பிஎஸ்என்எல் செறிவூட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 28 ஆயிரம் கிராம பகுதிகளில் 4ஜி மேம்படுத்தப்பட்ட திட்டம் செயல்படவுள்ளது. இதில் மொபைல் சேவையே இல்லாத கிராமங்களும் இடம்பெறுகிறது. மகராஷ்ட்ரா மாநிலத்தை பொறுத்தவரை 4,900 கிராமங்கள் இந்த சேவை நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த சேவை செயல்படுத்துவதற்கான நிதியை ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் சார்பில் நிகழ்த்தப்படும் இந்த மாற்றம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் நல்ல வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 2026-27ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் நிகர லாபத்தை பெறும்"

இவ்வாறு அவர் கூறினார்.