தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kanimozhi: 'பாஜக தங்களுடைய சொந்த பிரதமரை கூட பாதுகாக்க முடியவில்லை' - சஸ்பெண்ட் செய்யப்பட்ட கனிமொழி எம்.பி

Kanimozhi: 'பாஜக தங்களுடைய சொந்த பிரதமரை கூட பாதுகாக்க முடியவில்லை' - சஸ்பெண்ட் செய்யப்பட்ட கனிமொழி எம்.பி

Marimuthu M HT Tamil

Dec 15, 2023, 12:16 PM IST

'கட்டுப்பாடற்ற நடத்தை' காரணமாக மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
'கட்டுப்பாடற்ற நடத்தை' காரணமாக மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

'கட்டுப்பாடற்ற நடத்தை' காரணமாக மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வரம்பு மீறிய செயலால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாடாளுமன்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் மகர துவாரத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சஸ்பெண்ட் ஆன எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

ஐந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தின் ஒன்பது எதிர்க்கட்சி எம்.பி.க்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்தார். அதில் பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், பி.ஆர்.நடராஜன், கனிமொழி கருணாநிதி , கே.சுப்ரமணியம், எஸ்.ஆர்.பார்த்திபன், எஸ்.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகிய எம்.பி.க்கள் அடங்குவர்.

டிசம்பர் 13ஆம் தேதி பாதுகாப்பு மீறல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 14ஆம் தேதி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, குளிர்காலக் கூட்டத்தொடரின் எஞ்சிய பகுதிக்கு மக்களவையில் இருந்து ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். அத்தீர்மானத்தின்படி, டி.என். பிரதாபன் , ஹைபி ஈடன், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டீன் குரியகோஸ் ஆகிய எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற செயலகத்தின் பாதுகாப்பு பொறுப்பு, சபை உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்திய நிலையில், லோக்சபா பாதுகாப்பு மீறல் குறித்து அரசிடம் இருந்து அறிக்கை வெளியிடக்கோரி, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று டிசம்பர் 14ஆம் தேதி கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு மத்திய அரசின் உளவுத்துறை தோல்வியே காரணம் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் என்று குற்றம்சாட்டினார். அப்போது டிசம்பர் 14ஆம் தேதி, இறுதியில் மொத்தம் 13 எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து 'கட்டுப்பாடற்ற நடத்தை' காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ராஜ்யசபாவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அதில் அடுத்த கட்டமாக, பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், பி.ஆர்.நடராஜன், கனிமொழி கருணாநிதி , கே.சுப்ரமணியம், எஸ்.ஆர்.பார்த்திபன், எஸ்.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இதனிடையே  டெல்லியில் நாடாளுமன்றத்தில் உள்ள மகர துவாரத்தில் போராட்டம் நடத்தி வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேசினார்.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழி எம்.பியும் ஒருவர். இன்று அவர் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு,  தர்ணாவில் ஈடுபட்டார். 

முன்னதாக மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து திமுக எம்பி கே.கனிமொழி கூறும்போது, “பாஜகவால்தான் நாட்டைக் காக்க முடியும். ஆனால் அவர்களால் நாடாளுமன்றத்தைக் கூட பாதுகாக்க முடியாது என்று பாஜக பலமுறை கூறி வருகிறது. பாஜக தங்களுடைய சொந்த பிரதமரை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. பிறகு இந்த பிரச்னையை அரசியல் ஆக்குகிறோம் என்று சொல்கிறார்கள். எது நடந்தாலும் அதற்கு அரசு தான் பொறுப்பு சொல்ல வேண்டும். நாட்டில் ஏதேனும் பாதுகாப்பு மீறல் நடந்தால் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்’ என உறுதிபடத்தெரிவித்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி