தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Acid Attack: நடந்து சென்ற இளம்பெண் மீது ஆசிட் வீச்சு - முகம் முதல் மார்பு வரை சேதம்

Acid Attack: நடந்து சென்ற இளம்பெண் மீது ஆசிட் வீச்சு - முகம் முதல் மார்பு வரை சேதம்

Jun 22, 2023, 11:26 AM IST

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்டார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்டார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்டார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாகச் சிறுமிகள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட வருகின்றன. இளம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இருந்து வந்தாலும் தற்போது சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

இதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும், தண்டனைகளும் கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இது ஒரு புறம் இருக்க இளம் பெண்களைத் துன்புறுத்தும் செயல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

விஜயவாடா அருகே எலூரைச் சேர்ந்தவன் 35 வயதான பிரான்சிகா. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் வரவேற்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜமுந்திரியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து பெற்றோருடன் பிரான்சிகா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பிரான்சிகா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், அவர் மீது ஆசிட் வீசி உள்ளனர். இதில் பிரான்சிகா துடிதுடித்துப் போனார். ஆசிட் வீச்சு காரணமாக அவரது தலை, முகம் மற்றும் மார்பு பகுதிகள் பலத்த காயமடைந்துள்ளன. அலறி துடித்தபடி சாலையில் கீழே விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனே ஓடிச் சென்று அவரை மீட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரான்சிகா பெற்றோர் கதறி அழுதுள்ளனர். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரான்சிகா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிடிப்பதற்காக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆசிட் வீச்சு நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது ஆசிட் வீசி விட்டுச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரும் காவல் துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி