தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  6 2 Kg Heroin Seized In A Village Near Amrister Which Was Dropped By Pakistan Drone

Heroin Seized : பாக். ட்ரோன் வீசிச்சென்ற 6.2 கிலோ ஹெராயின் பறிமுதல்

Priyadarshini R HT Tamil

Mar 27, 2023, 03:32 PM IST

Pakistani Drone : பாகிஸ்தானின் ட்ரோன் போட்டுச்சென்ற 6.2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
Pakistani Drone : பாகிஸ்தானின் ட்ரோன் போட்டுச்சென்ற 6.2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Pakistani Drone : பாகிஸ்தானின் ட்ரோன் போட்டுச்சென்ற 6.2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அங்கு அப்போது பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஹெராயின் போதைப்பொருளை சுமந்து வந்த அந்த ட்ரோனை நோக்கி சுட்டார். ஆனால் அந்த ட்ரோன் தப்பியது. இந்த சம்பவங்கள் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள டூர் கிராமத்தில் நடைபெற்றவை. 

ட்ரெண்டிங் செய்திகள்

Gujarat: ஓரினச்சேர்க்கையால் வந்த வினை.. பார்சல் அனுப்பி காதலியின் கணவர், மகளை கொன்ற பெண்! - குஜராத்தில் பயங்கரம்!

Press Freedom Day 2024: பத்திரிகை சுதந்திர தின வரலாறு, முக்கியத்துவம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

Prajwal Revanna Case: தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மேலும் சிக்கல்..பிடியை இறுக்கும் கர்நாடக போலீஸ்!

Prajwal Revanna case: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தானின் ட்ரோன் டூர் கிராமத்திற்கு அருகில் வீசிச்சென்ற 6.2 கிலோவை பறிமுதல் செய்தனர். இந்த கிராமம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அஞ்சாலா பிரிவில் உள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த ட்ரோனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஆனால், அந்த ட்ரோன் தப்பிவிட்டது. 

இதுகுறித்த விவரங்களை தெரிவித்த எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர்கள் கூறுகையில், மார்ச் 26ம் தேதி இரவு சரியாக 9.36 மணிக்கு, நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பொருள் பறப்பது, ஒருவித குர் என்ற சத்தத்துடன் தெரிந்தது. அது ஒரு ட்ரோன் போல் இருந்தது. அது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள், அமிரிஸ்டர் மாவட்டத்தில் உள்ள டூர் கிராமத்திற்கு அருகே நுழைந்தது. அங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியின் படி, அங்கிருந்தவர்கள் அந்த ட்ரோனை துப்பாக்கி சூடு நடத்தி இடையில் நிறுத்த முயன்றார்கள். ஆனால் அந்த ட்ரோன் தப்பிவிட்டது. 

மேலும், 2023ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி அந்தப்பகுதி முழுவதும் கடுமையான சோதனை நடத்தப்பட்டது. அப்போது எல்லை காவல் படை வீரர்கள் 6 பெரிய பாக்கெட்களை கண்டெடுத்தார்கள். அதில் ஹெராயின் இருந்தது. அவை 6.2 கிலோ எடை இருந்தது. அங்கிருந்து நம்பர் ப்ளேட் இல்லாத ஒரு பைக்கும் இருந்தது. இவை அனைத்தையும் அந்த கிராமத்தின் கோதுமை வயல்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு விசாரணையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

டாபிக்ஸ்