தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  3 Crore Fine Has Been Imposed On Tirumala Tirupati Devasthanams

Tirupati Devasthanam: திருப்பதி கோயில் மீது அபராதம் - எத்தனை கோடி தெரியுமா?

Mar 28, 2023, 03:08 PM IST

திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் 3.19 கோடியை அபராதமாக வைத்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் 3.19 கோடியை அபராதமாக வைத்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் 3.19 கோடியை அபராதமாக வைத்துள்ளது.

உலகம் முழுவதும் ரசித்து பெற்றுக் கொள்ளாத திருப்பதி ஏழுமலையான் கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Prajwal Revanna Case: ஆபாச வீடியோக்கள் வழக்கு.. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!

Prajwal Revanna case: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

Jain monks: ஜெயின் துறவியாக மாறிய பெங்களூரு தொழிலதிபரின் மனைவி, 11 வயது மகன்!

IIT students: ‘20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை.. MIT-ல் இந்த எண்ணிக்கை அதிகம்’-RTI இல் அதிர்ச்சி தகவல்

தரிசனத்திற்காக வரும் வெளிநாட்டுப் பக்தர்கள் உண்டியலில் அவர்களது நாட்டின் கரன்சி நோட்டுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றேன். நேரடியாக வர முடியாத வெளிநாட்டுப் பக்தர்கள் இணையம் மூலம் அவர்களது நாட்டு கரன்சி நோட்டுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

இவ்வாறு வெளிநாட்டுப் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பணத்தைப் பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் பெற்ற உரிமத்தைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதுப்பிக்காமல் இருந்துள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் 3.19 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

இந்த செய்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் செய்த ட்விட்டின் மூலம் தெரிந்துள்ளது. உரிமம் புதுப்பிக்கப்படாத காரணத்தினால் இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாடுகளில் இருந்து வந்த கரன்சி நோட்டுகள் பரிமாற்றத்திற்கு உடன்படாமல் போனது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் போடப்படும் விலைமதிப்பற்ற தங்கம் வைரம் என பல காணிக்கைகளுக்குக் கணக்குக் காட்டத் தேவையில்லை. பெயர் தெரியாத பல பக்தர்கள் அளவுக்கு அதிகமான பணத்தை உண்டியல் காணிக்கையாக டெபாசிட் செய்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து காணிக்கையாகக் கிடைக்கும் அப்பணத்தை ரிசர்வ் வங்கி மூலம் தேவஸ்தானத்திற்கு நமது நாட்டுப் பணமாக மாற்றப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு இது போன்ற பணப் பரிமாற்றத்தை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. அதேபோல் தேவஸ்தான கணக்கில் வெளிநாட்டுக் கரன்சிகளை டெபாசிட் செய்ய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.

இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 30 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் தேவஸ்தான கணக்கில் டெபாசிட் செய்யப்படாமல் ஸ்டேட் பாங்க் வங்கியில் கிடக்கிறது. வெளிநாட்டில் வாழும் பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேவஸ்தானம் உரிமம் பெற்றுள்ளது.

இந்த உரிமம் ஆனது 2018 ஆம் ஆண்டு காலாவதியானது. இந்த உரிமத்தைத் திருப்பதி தேவஸ்தானம் புதுப்பிக்காமல் இருந்து வந்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துறை 2019 ஆம் ஆண்டு கண்டுபிடித்து உள்ளது.

இதன் காரணமாக தற்போது அபராத தொகையானது 4.33 கோடியை எட்டியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்