தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி-இந்தியாவில் 5 பேர் கைது

Cough syrup deaths: 3 ஊழியர்கள் 2 இயக்குநர்கள் கைது

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உத்தரபிரதேசத்தில் செயல்பட்டு வந்த உற்பத்தி நிறுவனத்தை சேர்ந்த 3 ஊழியர்கள் 2 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை குற்றம் சாட்டியதோடு அந்த மருந்துகளை ஆய்வு செய்தனர். இதில் எத்திலீன் கிளைக்கோல் அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டியது. இது சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை தொடர்ந்து தற்போது மேரியன் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்புகளான டோக்1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு மருத்துகளும் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் அதிரடியாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் மேரியன் பயோடெக் நிறுவனத்தின் ஊழியர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரண மேற்கொண்டனர். மேலும் இந்நிறுவனத்தில் இயக்குநர்களான ஜெயா ஜெயின் சச்சினி ஜெயின் ஆகிய இருவர் மீதும் மருந்து தயாரிப்பில் முறையேடு மருந்துகளை மாற்றி விற்பனை செய்தது உள்ளிட் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நொய்டாவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தின் மாதிரிகள் கடந்த டிசம்பர் முதல் ஜனவரி 12ம்தேதி வரை பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 22 மாதிரிகளில் தரம் குறைந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கடந்த அக்டோபரில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தபோது, அரியானா மாநிலம் சோனிபட் மெய்டன் மருந்து நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட மாசடைந்த நான்கு இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

அடுத்தடுத்து இந்திய மருத்துகள் மீது இது போன்ற குற்றச்சாட்டு எழுந்துவருவது உலக அளவில் இந்திய மருந்துகளின் தரத்தை கேள்விக் குறியாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி