தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Landslides: ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவால் பலத்த சேதம்!

Landslides: ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவால் பலத்த சேதம்!

Feb 20, 2023, 01:25 PM IST

Landslides in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
Landslides in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

Landslides in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 13 வீடுகள் முற்றிலும் தரைமட்டமானது. ராம்பன் - சங்கல்தான் கூல் சாலையில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 13 குடும்பத்தினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு ராணுவத்தினரால் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் போர்வை, பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த நிலச்சரிவால் பத்துக்கும் மேற்பட்ட சாலைகளில் பயங்கரமாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அந்தப் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின் வழித்தடம், குடிநீர் குழாய்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தற்போது மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடுத்தடுத்து மீட்ப பணிகள் நடைபெற்றவுடன் சேதங்கள் குறித்து முழுமையாகத் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி