தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sweet Lemon: உடலுக்கு குளிர்ச்சி மட்டுமல்ல - முடி வளர்ச்சி, வயிற்றுப்புண் நிவாரணம்! பல்வேறு நன்மைகளை தரும் சாத்துக்குடி

Sweet Lemon: உடலுக்கு குளிர்ச்சி மட்டுமல்ல - முடி வளர்ச்சி, வயிற்றுப்புண் நிவாரணம்! பல்வேறு நன்மைகளை தரும் சாத்துக்குடி

Mar 28, 2024, 05:59 PM IST

கோடை காலத்தில் பல்வேறு வகைகளில் உடல் ஆரோக்கியத்தில் நன்மை அளிக்ககூடியதாக சாத்துக்குடி உள்ளது.
கோடை காலத்தில் பல்வேறு வகைகளில் உடல் ஆரோக்கியத்தில் நன்மை அளிக்ககூடியதாக சாத்துக்குடி உள்ளது.

கோடை காலத்தில் பல்வேறு வகைகளில் உடல் ஆரோக்கியத்தில் நன்மை அளிக்ககூடியதாக சாத்துக்குடி உள்ளது.

கோடை காலம் என்றாலே பல்வேறு வகையான ஜூஸ்களை பருகி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதில் நாம் அதிக கவனம் செலுத்துவது இயல்புதான். பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்களை காட்டிலும் பிரஷ் ஜூஸ்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், ஆற்றலையும் இழக்காமல் பார்த்துக்கொள்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Honey Benefits in Summer : சுட்டெரிக்கும் வெப்பத்தால் தவிக்கிறீர்களா? இதோ ஒரு துளி தேன் அதற்கு என்ன செய்கிறது பாருங்கள்!

Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!

Reasons for Hair Loss : கொத்துக்கொத்தாக கொட்டும் முடியால் அவதியா? இதுதான் காரணங்கள்! தவிர்க்க என்ன செய்வது?

Summer Cool Natural Drink : கூல்கூல் சம்மர் வேண்டுமா? இதோ நுங்கு, இளநீர், நன்னாரி சர்பத்! வேறலெவல் டேஸ்டில் அசத்தும்!

அதேசமயம் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சில ஜூஸ் வகைகள் நன்மைகளை தருகின்றன. அந்த வகையில் வயிற்று புண்களை குணமாக்குவது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக சாத்துக்குடி ஜூஸ் உள்ளது.

சிட்ரஸ் குடும்பம்

சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த சாத்துக்குடியில் வைட்டமின் சி, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. என்னதான் சிட்ரஸ் குடும்பமாக இருந்தாலும் மற்ற சிட்ரஸ் பழங்களை காட்டிலும் அமிலத்தன்மையானது குறைவாகவே உள்ளது.

இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

சாத்துக்குடி மற்ற பழங்களை காட்டிலும் விலை சற்று குறைவாக கிடைக்கும். இந்த பழத்தை ஆங்கிலத்தில் மொசம்பி ப்ரூட் என்கிறார்கள். சுவிட் லெமன் என்றும் அழைப்பதுண்டு.

இந்த பழத்தை சாறை ஜூஸாக பருக வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் தோல்களை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடலாம். இந்த பழத்தில் ஜூஸ், ஜாம், ஊறுகாய், சாலட், சர்பத் செய்து சாப்பிடலாம். கோடை காலத்துக்கு உகந்த பழமாக இருக்கும் சாத்துக்குடி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது

சாத்துக்குடி பழங்கள் இந்தியா போன்ற வெப்பம் மிக்க பகுதிகளில் அதிகமாக வளருகிறது. 25 அடி உயரம் வரை வளரும் சாத்துக்குடி மரத்தில் ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருக்கும் சாத்துக்குடி பின்னர் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

ஜூலை முதல் ஆகஸ்ட் வரை, பின்னர் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இதன் சீசன் உள்ளது

சாத்துக்குடி நன்மைகள்

டைப்பாய்டு போன்ற நோய் பாதிப்பு ஏற்பட்டால் வயிறு மற்றும் குடல் பகுதிகள் புண்ணாகி விடும். இதனால் சாப்பிட முடியாத சூழ்நிலை உருவாகும். டைப்பாய்டு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள், பிரசவித்த பெண்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சாத்துக்குடி ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் புண் விரைவில் குணமாகும்

பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் மாதவிலக்கு நின்றுவிட்டால் கால்சியம் சத்து குறைவால் ஆஸ்டியோபோரேசிஸ், ஆஸ்டிரியோ ஆர்த்ரேடிஸ் போன்ற எலும்பு நோய்கள் பாதிக்கப்படும். இதை தடுக்க சாத்துக்குடி பழம் சாப்பிடலாம். இந்த பழம் உடல் சோர்வை போக்கி புத்துணர்ச்சியை தரும்

இந்த பழத்தில் இருக்கும் லிமோனின் குளுகோசைடு எனப்படும் பிளேவனாய்டுகள் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் குணம் கொண்டுள்ளது.

தலைமுடி பராமரிப்புக்கு பயன்படும் சாத்துக்குடி

சாத்துக்குடி பழச்சாறுடன், மருதானி தூள் கலந்து தலைமுடியில் தடவி ஊறை வைத்து குளிப்பதன் மூலம் நரை முடியை போக்கலாம். இதில் இருக்கும் காப்பர் சத்து மூளையில் உள்ள மெலானின் அளவை அதிகரித்து கூந்தலை கருமையுடன் இருக்க உதவுகிறது.

சாத்துக்குடி சாறு தலையில் இருக்கும் பொடுகுகளை போக்க உதவுகிறது. வெடிப்பை தடுத்து முடி வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி