தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Apricots: இதயம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட வாதுமை பழம்

Benefits of Apricots: இதயம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட வாதுமை பழம்

May 09, 2024, 05:57 PM IST

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட வாதுமை பழம் மஞ்சள், ஆரஞ்சு கலந்த நிறத்தில் உள்ளது. கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் இந்தப் பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் பெறுவதோடு இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட வாதுமை பழம் மஞ்சள், ஆரஞ்சு கலந்த நிறத்தில் உள்ளது. கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் இந்தப் பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் பெறுவதோடு இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட வாதுமை பழம் மஞ்சள், ஆரஞ்சு கலந்த நிறத்தில் உள்ளது. கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் இந்தப் பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் பெறுவதோடு இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

வாதுமை பழமானது இந்த கோடை காலத்தில் கிடைக்கும் பழமாக மட்டுமல்லாமல், உங்கள் உணவில் இணைத்து சாப்பிடும் சிறந்த பழமாகவும் உள்ளது. ஆரோக்கியம் நிறைந்த இந்த பழத்தில் அடர்த்தியான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக நிபுணர்கள் பலரும் கூறுகிறார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weight Loss Snacks: எடை குறைப்புக்கு வழிவகுக்கும் நார்சத்து மிக்க ஸ்நாக்ஸ் வகைகள்! வீட்டிலேயே தயார் செய்யலாம்

Avoid rapid weight loss: ‘விரைவான எடை இழப்பு வேண்டாம்.. வாரத்திற்கு எவ்வளவு எடை குறைந்தால் நல்லது?’-ICMR

Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

கண் பார்வை மேம்படும்

கண்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் ஏ, ஈ போன்ற கலவைகள் ஏராளமாக வாதுமை பழத்தில் உள்ளன. மாலக்கண் பாதிப்பை தடுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது வைட்டமின் ஏ. அதேபோல் வைட்டமின் ஈ சத்துகளில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் கண்களுக்குள் நேரடியாக புகுந்து ரேடிக்கல் சேதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

வாதுமை பழம் பீட்டா கரோடீன் சத்துக்களின் சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. வைட்டமின் ஏ சத்துகளின் முன்னோடியாகவும், ஆரஞ்சு நிறத்தை அளிக்கும் அளிக்கும் முக்கிய கரோட்டினாய்டுகளும் இடம்பிடித்துள்ளது.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

வாதுமை பழத்தில் உள்ள பீனாலிக் கூறுகளான க்ளோரோஜெனிக் அமிலம், பீட்டா கரோடீன், லைக்கோபீன் ஆகியவை எல்டிஎல் எனப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதத்தின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது. இதனால் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மேம்படுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் உடல் அமைப்புகளில் உள்ள எலெக்ட்ரோலைட்களை சமநிலைபடுத்துகிறது. இதயத்தில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. டயட்ரி நார்ச்சத்துகள், பித்த அமிலங்களை பிணைப்பதன் மூலம் எல்டிஎல் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கல்லீரல் செல்களில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

கல்லீரல் வீக்கம் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

கல்லீரல் திசுக்களில் உள்ள கொழுப்புகளில் இடம்பிடித்திருக்கும் சைட்டோபிளாஸ்மிக் குவிப்பு காரணமாகவே கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் அடுத்தகட்டமாக ஃபைப்ரோஸிஸ் மற்றும் சிரோசிஸ் நிலைக்கு செல்ல நேரிடும். அந்த வகையில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் பங்கு வாதுமை பழத்துக்கு வெகுவாக உள்ளது.

மலச்சிக்கலுக்கு தீர்வு

ஆப்ரிகாட் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து கரையக்கூடியதாக உள்ளது. இது குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. குடலில் மலத்தை தேக்காமல் வெளியேற்ற செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்தானது கொழுப்பு அமிலங்களாக மாற்றப்பட்டு செரிமானத்தை சீராக்குகிறது

ரத்தத்துக்கு நன்மை

உடல் இரும்பு சத்துக்களை உறிஞ்சு எடுக்க சில நேரமெடுக்கும். எனவே அவை உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். இதன் காரணமாக ரத்த சோகை போன்ற இரும்புச்சத்து. இதை தடுக்கும் வல்லமை கொண்டதாக வாதுமை பழம் உள்ளது.

டயபிடிஸுக்கு நன்மை

குறைந்த கிளைசெமின் குறியீட்டைக் கொண்டிருப்பதால் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகமாக்காது என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. உலந்த ஆப்ரிகாட் பழங்களிலிருக்கும் மிதமான அளவு கொண்ட

எலும்புகளை பலப்படுத்துகிறது

எலும்புகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு கால்சியம் இன்றியமையாதது. ஆப்ரிகாட் பழத்தில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. அதேபோல் போதிய அளவில் பொட்டசியமும் கொண்டுள்ளது. 

இதே போல் ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, மூட்டு ஆரோக்கியம் இதயத்துடிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி