தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ht Book Spl From Fetus Formation To Childbirth A Guide For Pregnant Women

HT Book SPL: கரு உருவாவது முதல் குழந்தை பிறப்பது வரை.. கர்ப்பிணிகளுக்கான கையேடு!

Manigandan K T HT Tamil

May 31, 2023, 06:50 AM IST

Dr. Jeyarani Kamaraj: குழந்தைப் பேறு தள்ளிப் போட்டால், எவ்வளவு ஆண்டுகள் தள்ளிப் போடலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடவில்லை, ஆனால், கருத்தரிக்க இயவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
Dr. Jeyarani Kamaraj: குழந்தைப் பேறு தள்ளிப் போட்டால், எவ்வளவு ஆண்டுகள் தள்ளிப் போடலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடவில்லை, ஆனால், கருத்தரிக்க இயவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

Dr. Jeyarani Kamaraj: குழந்தைப் பேறு தள்ளிப் போட்டால், எவ்வளவு ஆண்டுகள் தள்ளிப் போடலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடவில்லை, ஆனால், கருத்தரிக்க இயவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரியான வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தைக்கு முயற்சி செய்தாலும் குழந்தைப் பேறு என்பது பலருக்கு இன்னும் கிடைக்காத ஒரு நிலையே நீடித்து வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Benefits of Beer : என்ன பீர் குடித்தால் உங்களின் வாழ்நாள் நீடிக்குமா? எப்படி குடிக்கவேண்டும்? – வழிகாட்டி

Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!

Tea : 'ஒரு டீ சாப்பிடலாமா சார்.. இந்த வார்த்தைக்கு பின்னாடி இத்தனை கதை இருக்கா' தேநீர் என்றும் நமக்கு சுவையான பானம்தான்!

Benefits of Bottle Guard : கோடையில் இந்த ஒரு காய் மட்டும் போதும்! உடலில் தண்ணீர் சத்து குறையாது!

வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இரவு நேரப் பணி என பல விஷயங்களில் கடந்த 10 ஆண்டுகளாக பல மாற்றங்களை கண்டுள்ளோம்.

இதனால், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் கல்வி போன்றவையும் நமக்கு இங்கே கற்றுக் கொடுக்கப்படாமல் இருப்பதால், பலருக்கு தாம்பத்திய வாழ்க்கையை எப்படி அணுகுவது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

திருமணம் எப்போது செய்து கொள்ள வேண்டும். குழந்தையை தள்ளிப் போடலாமா? வேண்டாமா?

குழந்தைப் பேறு தள்ளிப் போட்டால், எவ்வளவு ஆண்டுகள் தள்ளிப் போடலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடவில்லை, ஆனால், கருத்தரிக்க இயவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? எத்தனை ஆண்டுகள் வரை பொறுமை காக்கலாம், பிறகு என்னென்ன சிகிச்சை மேற்கொள்ளலாம் என பல சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது கரு முதல் குழந்தை வரை புத்தகம்.

இந்தப் புத்தகத்தை மருத்துவர் ஜெயராணி காமராஜ் எழுதியிருக்கிறார். மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் தங்கப்பதக்கமும் வென்றவர்.

இவரது கணவரும் பிரபலமானவரான மருத்துவர் காமராஜ்.

'கர்ப்பத்தின் போது சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தசையின் பலத்தை அதிகரிக்கவும் களைப்பைப் போக்கவும் முடியும்.

அதிர்வது போன்ற அசைவுகள் இல்லாமல் எப்போதும் மென்மையாக உடற்பயிற்சி செய்யுங்கள். வலியை உண்டாக்குகிறது உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்' - இதுபோன்ற எண்ணற்ற சந்தேகங்களுக்கு பதிலளித்திருக்கிறார் ஜெயராணி காமராஜ்.

நூலாசிரியர் மருத்துவர் ஜெயராணி காமராஜ் மற்றும் அவர் எழுதிய நூலின் அட்டைப் படம்

புத்தகத்தின் கடைசி பக்கங்களில் உங்களுக்கு திருமணம் நடந்த நாள், கரு உருவான நாள், குழந்தை பிறந்த நாள் என பல தகவல்களை குறித்து வைத்துக் கொள்ள சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசியின் பெயர் என்ன? அதன்பிறகு என்னென்ன தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பது குறித்த விவரங்களும் உள்ளன. இதனால், நீங்கள் குழந்தை பிறகு எப்போது, என்ன தடுப்பூசி போட வேண்டும் என நீங்கள் குழப்பம் அடையத் தேவையில்லை.

மொத்தத்தில் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சிறந்த கையேடாக இந்நூல் இருக்கும். இந்நூலை நலம் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 231 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ.225.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்