தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kovakkai Poriyal How To Make Nutritious Kovakkai Poriyal Can Diabetics Eat It

Kovakkai Poriyal: சத்தான கோவக்காயில் கடலை வறுத்து போட்டு செய்யும் ருசியான பொரியல்.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 04, 2024 06:00 AM IST

Kovakkai Poriyal Recipe: 40 மில்லி கிராம் கால்சியமும், 30 மில்லி கிராம் பாஸ்பரஸும், 1.4 மில்லி கிராம் இரும்பு சத்தும், 0.07 மில்லிகிராம் தையமின் என்ற வைட்டமினும், 0.08 மில்லி கிராம் ரிபோப்ளாவின் என்ற வைட்டமினும், 59 மில்லி கிராம் போலிக் ஆசிடும், 1.56 மில்லி கிராம் கரோடீனும் இருக்கிறது.

சத்தான கோவக்காயில் கடலை வறுத்து போட்டு செய்யும் ருசியான  பொரியல்..
சத்தான கோவக்காயில் கடலை வறுத்து போட்டு செய்யும் ருசியான பொரியல்..

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கோவக்காய் – கால் கிலோ

பொட்டுக்கடலை – அரை கப்

வேர்க்கடலை – அரை கப்

எள் 2 ஸ்பூன்

வர மிளகாய் – 2

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்தம்பருப்பு– கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தேங்காய் துருவல் – அரை கப்

பெரிய வெங்காயம் – 1

செய்முறை

கோவக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து நீள வாக்கில் வெட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் வரமிளகாய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து வேர்க்கடலையை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு ஸ்பூன் எள்ளையும் சேர்த்து வறுக்க வேண்டும்.

இரண்டும் பொன்னிமாகும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அதே எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பெரியவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் கோவக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வேகவிடவேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயை மூடிவைத்து வேகவிடவேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொட்டுக்கடலை, எள், மற்றும் வரமிளகாய், தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் கோவக்காய் வெந்தவுடன், அதில் அரைத்து வைத்துள்ள இந்தப்பொடியை சேர்த்து கலந்துவிடவேண்டும்.

பின்னர் வறுத்து வைத்துள்ள கடலை சேர்த்து அனைத்தையும் கலந்துவிடவேண்டும்.

அவ்வளவு தான் ருசியாக கோவைக்காய் பொரியல் ரெடி. இந்த பொரியல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. சூடான சாதத்துடன் சேர்த்து கொஞ்சமாக நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். சாம்பார்சாதம், ரசம் சாதம், புளிக்குழம்பு, தயிர் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட எந்த உணவோடும் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். ருசி மற்றும் அல்ல கோவைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

கோவைக்காயில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்

100 கிராம் கோவக்காயில் 1.2 கிராம் புரதம் இருக்கிறது. 0.1 சதவீதம் கொழுப்பு இருக்கிறது. 1.6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. 3.1 கிராம் மாவு பொருள் இருக்கிறது.

40 மில்லி கிராம் கால்சியமும், 30 மில்லி கிராம் பாஸ்பரஸும், 1.4 மில்லி கிராம் இரும்பு சத்தும், 0.07 மில்லிகிராம் தையமின் என்ற வைட்டமினும், 0.08 மில்லி கிராம் ரிபோப்ளாவின் என்ற வைட்டமினும், 59 மில்லி கிராம் போலிக் ஆசிடும், 1.56 மில்லி கிராம் கரோடீனும், 18 கிலோ கிராம் கலோரியும் இருக்கிறது.

வாய்ப் புண்கள், வயிற்று புண்கள் உள்ளவர்கள் இந்த கோவக்காயை சாப்பிடுகிறார்கள். அதற்கு காரணம், அதில் உள்ள வைட்டமின் பி சத்து இந்த புண்களை ஆற்றுவதற்கு பயன்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel