Glowing Face : இரவில் இரண்டு சொட்டு மட்டும் இதை முகத்தில் தடவவேண்டும்! காலையில் முகம் ஜொலிக்கும்!
Glowing Face : முகப்பொலிவுக்கு என்ன செய்யவேண்டும்? இரவில் இதை மட்டும் இரண்டு சொட்டு முகத்தில் தடவி பயன்பெறுங்கள்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
பொதுவாகவே முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு கிரீம்களையும் முகத்தில் தடவுகிறோம்.
ஆனால் அவை உடலுக்கு பல்வேறு கேடுகளை ஏற்படுத்தக்கூடியவை. நாம் வீட்டிலே பயன்படுத்தும் பொருட்களை வைத்து முகத்தை பொலிவாக்க முடியும் என்றால், உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியைத்தரும்.
முதலில் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும பராமரிப்பு என அனைத்துக்கும், உங்கள் உடல் போதிய நீர்ச்சத்துடன் இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் நிறைய தண்ணீர் பருகவேண்டும்.
நமது எடையளவுக்கு ஏற்ப தண்ணீர் பருகுவது அவசியம். உங்கள் உடல் எடை 50 கிலோ இருந்தால் கிட்டத்தட்ட 3 லிட்டர் அளவு தண்ணீர் பருகவேண்டும். அப்போது உங்கள் சருமம் பளபளப்பாகும்.
வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து நாம் பயன்படுத்தும் இரவு கிரீம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
(இதில் உள்ள வைட்டமின் இ சருமத்தில் கொலஜென் உற்பத்திக்கு உதவுகிறது. சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளும்)
பாதாம் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்
(சருமத்துக்கும், தலைமுடிக்கு உதவும். உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும்)
கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
கிளிசரின் – ஒரு ஸ்பூன்
செய்முறை
இவையனைத்தையும், ஒரு பவுலில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். நீங்கள் தொடர்ந்து அடித்து கலக்கும்போது அது கெட்டியாக இருக்கும்.
இதை வெளியில் வைத்து பயன்படுத்தாலம். ஆனால் நீங்கள் ஃபிரஷ் கற்றாழை ஜெல் பயன்படுத்தினால், ஃபிரிட்ஜில் வைத்துதான் பயன்படுத்தவேண்டும்.
பயன்படுத்தும் முறை
10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இரவு முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு, துடைத்துவிட்டு, இரண்டு சொட்டு மட்டும் எடுத்து முகத்தில் தடவவேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் கை-கால்களிலும் தடவிக்கொள்ளலாம்.
இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவேண்டும். காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் முகம் பொலிவாக இருக்கும். இதை தினமும் செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
இதை பயன்படுத்தும்போது முகப்பருக்கள் அல்லது முகத்தில் எவ்வித பிரச்னைகளும் வராது. கூடவே நீங்கள் போதிய அளவு தண்ணீரும் பருகவேண்டும்.
இதைச் செய்யும்போது, உங்கள் சருமம் பளபளப்படையும், மலச்சிக்கல் பிரச்னைகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.