தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo:‘லியோ இவ்வளவு வசூலிக்குமா? எந்த பைத்தியக்காரன் சொன்னது?’ திருச்சி ஸ்ரீதர்!

LEO:‘லியோ இவ்வளவு வசூலிக்குமா? எந்த பைத்தியக்காரன் சொன்னது?’ திருச்சி ஸ்ரீதர்!

HT Tamil Desk HT Tamil

Feb 25, 2023, 12:35 PM IST

Trichy Sridhar Interview: மாநகரத்தோடு கலெக்‌ஷன் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? கைதி எவ்வளவு கலெக்‌ஷன் பண்ணுச்சுனு உங்களுக்கு தெரியுமா? விக்ரம் என்ன கலெக்ட் பண்ணுச்சுனு தெரியுமா? அப்படி இருக்கும் போது, எப்படி லியோ ஆயிரம் கோடி வசூல் செய்யும்?
Trichy Sridhar Interview: மாநகரத்தோடு கலெக்‌ஷன் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? கைதி எவ்வளவு கலெக்‌ஷன் பண்ணுச்சுனு உங்களுக்கு தெரியுமா? விக்ரம் என்ன கலெக்ட் பண்ணுச்சுனு தெரியுமா? அப்படி இருக்கும் போது, எப்படி லியோ ஆயிரம் கோடி வசூல் செய்யும்?

Trichy Sridhar Interview: மாநகரத்தோடு கலெக்‌ஷன் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? கைதி எவ்வளவு கலெக்‌ஷன் பண்ணுச்சுனு உங்களுக்கு தெரியுமா? விக்ரம் என்ன கலெக்ட் பண்ணுச்சுனு தெரியுமா? அப்படி இருக்கும் போது, எப்படி லியோ ஆயிரம் கோடி வசூல் செய்யும்?

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர், இணையதளம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ:

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Actor Murali: இதயம் நிறைந்த நாயகன்..காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி பிறந்தநாள் இன்று!

29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’

Paandi Nattu Thangam: வனத்தை காக்கும் கார்த்திக்..நாட்டை காக்கும் நம்பியார்..பட்டையை கிளப்பிய 'பாண்டி நாட்டு தங்கம்'

முழு நீள காமெடி.. காசுதான் எந்த காலத்துக்கும் கடவுள்.. என்றும் புதிய படம் காசேதான் கடவுளடா

‘‘பொங்கல் ரிலீஸ் படங்கள் முடிந்து, அடுத்த ஏப்ரலில் தான் பொன்னியின் செல்வன் 2 மாதிரியான பெரிய படங்கள் வரவிருக்கிறது. பிப்ரவரி, மார்ச்சில் சிறிய படங்கள் வெளியாகிறது. இந்த படங்களுக்கு மக்களின் வரவேற்பு குறைவாக தான் உள்ளது. 

காரணம், சிறு முதலீட்டு படம் வெளியாகி இரண்டு நாள் கழித்து அதற்கு வரும் விமர்சனம், அல்லது அதை பார்த்தவர்கள் நன்றாக இருந்து மற்றவர்களிடம் கூறினால், நல்ல கண்டன்ட் இருந்தால் தான் தியேட்டருக்கு வருகிறார்கள். மற்றபடி வருவோர் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது. 

100 சதவீதம் நான் ஒன்று கூறுகிறேன், விஜய்-லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள லியோ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்பதெல்லாம் நடக்கவே நடக்காத விஷயம். உலகத்திலேயே சிறந்த பைத்திரக்காரர் வேண்டுமானால் அவ்வாறு சொல்லலாம். என்னால் அப்படி சொல்ல முடியாது. 

தமிழ்நாடு அளவில் 1500 தியேட்டர் இருக்கு, இந்திய அளவில் அடுத்து உலக அளவில் என பார்க்கும் போது, 5 ஆயிரம் தியேட்டர்கள் வைத்துக்கொள்ளுங்கள். 5 ஆயிரம் தியேட்டரில் நீங்கள் போட்டால் கூட,எப்படி ஆயிரம் கோடி ரூபாய் வரும்? அதெல்லால் டோட்டலா பொய்யான விசயம். 

LCU(லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்) வருது, விக்ரம், கைதிக்கெல்லாம் கனெக்ட் இருக்கு என்று அதற்கு காரணத்தை கூற முடியாது. லோகேஷ் கனகராஜ் இதுவரை எத்தனை படம் எடுத்திருக்கிறார்? மாநகரம், கைதி, மாஸ்டர், இப்போ விக்ரம். 

மாநகரத்தோடு கலெக்‌ஷன் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? கைதி எவ்வளவு கலெக்‌ஷன் பண்ணுச்சுனு உங்களுக்கு தெரியுமா? விக்ரம் என்ன கலெக்ட் பண்ணுச்சுனு தெரியுமா? அப்படி இருக்கும் போது, எப்படி லியோ ஆயிரம் கோடி வசூல் செய்யும்? 

மாஸ்டர் படத்தின் பெரிய வெற்றிக்கு காரணம், லோகேஷ், அனிருத் எல்லாரும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதில் விஜய்-விஜய்சேதுபதி என ரெண்டு கேரக்டர் இருந்தார்கள். அதையும் திரும்ப திரும்ப பார்க்கனும். அதில் கொஞ்சம் கண்டன்ட் இருந்தது. ஆனால் அந்த படத்தில் ஹீரோயின் பெரிய மைனஸ். அந்த படம் வெற்றி அடைந்ததற்கு லோகேஷ் மட்டும் காரணம் என என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அது ஒரு அணி வெற்றி. 

ஏதேதோ காரணம் சொல்லி, லியோ படம் 500 கோடி வசூல் ஆகும் என்றெல்லாம் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள், நானும் நம்பிக்கையோடு இருக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள், தயாரிப்பாளரும் நம்பிக்கையோடு தான் இருப்பார், ஹீரோவும் நம்பிக்கையோடு தான் இருப்பார், நம்பிக்கை எல்லாமே ஜெயிக்கனும் என வேண்டிக்கொள்வோம். அது எதுவாக இருந்தாலும் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் சொல்ல முடியும். படம் வெளியான பின் வரும் வசூலை வைத்து தான் சொல்ல முடியும். அதற்கு முன் வரும் தகவல் எல்லாமே ஹேசியம் தான்,’’

என்று அந்த பேட்டியில் ஸ்ரீதர் கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி