தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rrr:ஹாலிவுட்டில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு விருது படையல்;சாதித்து காட்டிய ராஜமெளலி!

RRR:ஹாலிவுட்டில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு விருது படையல்;சாதித்து காட்டிய ராஜமெளலி!

Feb 25, 2023, 12:50 PM IST

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது விழாவில் விருதுகளை வென்றிருக்கிறது. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் என்பதை பார்க்கலாம்
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது விழாவில் விருதுகளை வென்றிருக்கிறது. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் என்பதை பார்க்கலாம்

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது விழாவில் விருதுகளை வென்றிருக்கிறது. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் என்பதை பார்க்கலாம்

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Actor Murali: இதயம் நிறைந்த நாயகன்..காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி பிறந்தநாள் இன்று!

29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’

Paandi Nattu Thangam: வனத்தை காக்கும் கார்த்திக்..நாட்டை காக்கும் நம்பியார்..பட்டையை கிளப்பிய 'பாண்டி நாட்டு தங்கம்'

முழு நீள காமெடி.. காசுதான் எந்த காலத்துக்கும் கடவுள்.. என்றும் புதிய படம் காசேதான் கடவுளடா

இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இந்த வரவேற்பை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியானது. அங்குள்ள மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர் அங்கும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. குறிப்பாக ஜப்பானில் முன்னதாக வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படம் என்று சாதனை படைத்திருந்த ரஜினியின் முத்து படத்தின் வசூலை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படமாக ஆர்.ஆர்.ஆர் மாறியது.

இதுமட்டுமல்லாமல் இந்தப்படத்தில் இடம் பெற்று வரவேற்பை பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருதையும் வென்றது. சிறந்த அசல் பாடலுக்கான விருது பட்டியலில் இடம் பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ரிஹானா, லேடி காகா மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோரின் பாடல்களை கடந்து வெற்றி பெற்றது. அந்த பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரும் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டினர்.

இந்த நிலையில் தற்போது ஆர்.ஆர். ஆர் திரைப்படம் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது விழாவில் 4 பிரிவுகளில் விருதுகளை குவித்திருக்கிறது.

அதன்படி சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம், சிறந்த சண்டைக்காட்சி, சிறந்த பாடல், சிறந்த சர்வதேச திரைப்படம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்கர் விருது விழாவில் ஆர்.ஆர். ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கரின் சிறந்த பாடல் பிரிவில் இடம் பெற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம் ஆக உள்ளது. அந்த விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைக்கும் என ஆர்.ஆர்.ஆர் படக்குழு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி