தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rathnam Review: ரத்னம்:3வது முறையாக ஹரி - விஷால் கூட்டணி தெறிக்கவிட்டதா? தேரை இழுத்து தெருவில் விட்டதா? - முழு விமர்சனம்

Rathnam Review: ரத்னம்:3வது முறையாக ஹரி - விஷால் கூட்டணி தெறிக்கவிட்டதா? தேரை இழுத்து தெருவில் விட்டதா? - முழு விமர்சனம்

Apr 26, 2024, 08:26 PM IST

Rathnam Full Review: விஷால் மற்றும் ஹரி கூட்டணியால் உருவான ரத்னம் திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா இல்லையா என்பதை பார்ப்போம்.
Rathnam Full Review: விஷால் மற்றும் ஹரி கூட்டணியால் உருவான ரத்னம் திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா இல்லையா என்பதை பார்ப்போம்.

Rathnam Full Review: விஷால் மற்றும் ஹரி கூட்டணியால் உருவான ரத்னம் திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா இல்லையா என்பதை பார்ப்போம்.

Rathnam Full Review: இயக்குநர் ஹரி ஒரு படத்தை எடுக்கும்போது, படம் முழுவதும் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்கும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். சாமி, சிங்கம் போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஹரி, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின், நடிகர் விஷாலுடன் மூன்றாவது முறையாக ரத்னம் படத்தில் இணைகிறார். பெரும்பாலான ஹரி படங்களைப் போலவே, இந்த படமும் இருக்கிறது. இந்த முறை தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

Kamal Haasan: ‘தோனிய அப்படி கூப்பிடுறதுதான் சரியா இருக்கும்; டிக்சனரி புரட்டி புதுபெயர் கொடுத்த கமல்!-இது நல்லா இருக்கே!

1994ஆம் ஆண்டில் திருப்பதி மலையில் மூன்று கொள்ளையர்கள் ஒரு பேருந்தைத் தாக்குவதிலிருந்து படத்தின் கதை தொடங்குகிறது. இந்த தாக்குதலில் 26 பேர் மரிக்கின்றனர்.

மேலும் குற்றத்தை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். பின்னர், கதை ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பின், வேலூருக்கு செல்கிறது. அங்கு ஒரு அநாதையான 12 வயது சிறுவன் ஒருவன், ஒரு கொலைத்தாக்குதலுக்கு ஆளாக இருந்த, பன்னீர்செல்வனை (சமுத்திரக்கனி) காப்பாற்றுகின்றான்.

அந்த சிறுவன் தான், ரத்னம்(விஷால்). வளர்ந்தபின், பன்னீர்செல்வனின் வலதுகரமாக மாறுகிறார். பன்னீர் செல்வம், ரவுடியாக இருந்து எம்.எல்.ஏ மாறிவிடுகிறார். 

வேலூரில் குண்டர்களாக இருக்கும் ரத்னத்தையும் அவரது ஆட்களையும் ஏழைகளுக்கு உதவவும், நீதி தேவைப்படுபவர்களுக்கும் உதவவும் மட்டுமே பன்னீர்செல்வன் பயன்படுத்துகிறார்.  சுருக்கமாக சொன்னால்,  ரத்னம் மற்றும் அவரது சகாக்கள் பணத்திற்காக கொலை செய்வதில்லை, ஒருவரை கொலை செய்வதற்குக் கூட அவர்களுக்கு கொள்கைகளும் காரணங்களும் உள்ளன. இதை ரத்னமே ஒரு காட்சியில் சொல்கிறார்.

நன்மைக்காக ரவுடித்தனம் செய்யும் ‘ரத்னம்’ தனது பணியைச் செய்யும்போது, அவரது பாதை திடீரென நீட் தேர்வு எழுத திருத்தணியில் இருந்து வரும் நர்ஸ் மல்லிகாவை (பிரியா பவானி சங்கர்) பார்க்கிறார்.

அப்போது ரத்னம், இறந்துபோன, தனது அம்மாவை ஒத்திருக்கும் மல்லிகாவைப் பார்த்து கலக்கமடைகிறார். திடீரென ராயடு (முரளி ஷர்மா) தலைமையில் ஒரு ஆந்திரக் கும்பல், அவளைக் கொல்ல வருகிறது. ரத்னம் மீண்டும் மீட்பராக இருக்கிறார். இந்த கும்பல் ஏன் அவளை கொல்ல விரும்புகிறார்? அந்தப்பெண் யார்? ரத்னத்தின் அம்மாவுக்கும் மல்லிகாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் கதை.

இயக்குநர் ஹரியின் படங்களை நீங்கள் பார்த்திருந்தால், தீவிரமான ஜீப் துரத்தல் காட்சிகள், அரிவாளைப் பிடிக்கும் ஆண்கள் இருக்கும் காட்சிகள் மற்றும் வன்முறை மிகுதியாக இருக்கும் காட்சிகள் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

மேலும் சில நகைச்சுவை நடிகர்கள், அவ்வப்போது ஜோக் அடிப்பர். அது இப்படத்திலும் உள்ளது. ரத்னமும் ஆரம்பத்திலிருந்தே சண்டை செய்துகொண்டே இருக்கிறார். இடையே அதிரடியுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் காமெடி செய்கின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, லாஜிக் தான் குறைவாக உள்ளது.

முதல் பாதி ரத்னம் யார் என்பதை நிறுவினாலும், இரண்டாம் பாதி மல்லிகாவை வைத்து கதையை முன்னோக்கி நகர்த்துகிறது.

கோர்வையான கதைக்களம் இல்லை. உண்மையில் சில காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கு பொருந்தவில்லை. மந்தமான கதையாக இருப்பதால், ஒரு கதையில் இருந்து இன்னொரு கதைக்கு துண்டு துண்டாக நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம்.

படம் புதியதாக ஈர்க்கக்கூடியதாகவும் இல்லை. மேலும் உணர்ச்சிகரமான காட்சிகளும் ஒட்டவில்லை.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், தனது குத்துப் பாடல்களுக்கு இசையமைப்பதில் பெயர் பெற்றவர் (குறிப்பாக தெலுங்கு சினிமாவில்). ஆனால், ரத்னம் திரைப்படத்தில் இது மொத்தமாக மிஸ்ஸிங். பாடல்கள் சராசரிக்கும் கீழாக, முற்றிலும் மறக்கடிக்கும் வகையில் உள்ளன.

உண்மையில், படத்தின் கதைக்கு அதிக மதிப்பு சேர்க்காததால் இரண்டு பாடல்களை படத்தில் இருந்து நீக்கியிருக்கலாம். நிச்சயமாக, தேவிஸ்ரீபிரசாத் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்துக்குத் தேவையான பின்னணி இசையைத் தந்துள்ளார்.

நடிப்பைப் பொறுத்தவரை விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, முரளி சர்மா ஆகியோர் கொடுக்கப்பட்ட பணியை செய்துள்ளனர். விஷால் ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவர் என்றாலும், ஹரியின் ரத்னம், அவரது ஆக்‌ஷன் திரைப்பட கிரீடவரிசையில், பெரிய இறகு இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

ரத்னம் ஒரு டெம்ப்ளேட் மசாலா ஹரி படம். ஒருவரியில் சொன்னால், புதிய பாட்டிலில் ஊற்றப்பட்ட பழைய ஒயின், புதிய மொந்தையில் பழைய கள் எனலாம். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி