தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cm Stalin : ஆஸ்கர் விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

CM Stalin : ஆஸ்கர் விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Divya Sekar HT Tamil

Mar 13, 2023, 12:58 PM IST

Oscar winners : ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Oscar winners : ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Oscar winners : ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரையுலகின் மிக உயரிய விருதான 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலமொழித் திரைப்படங்கள் ஆஸ்கர் விருது வென்றுகளை வென்று வருகின்றன. 

ட்ரெண்டிங் செய்திகள்

28 Years of Indian: ரஜினியின் பாட்ஷா வசூலை பின்னுக்கு தள்ளிய கமலின் இந்தியன்! தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் திரைப்படம்

27 Years Of Pistha: மறக்க முடியுமா?கார்த்திக் - நக்மாவின் கலக்கல் நடிப்பில் உருவான 'பிஸ்தா' ரிலீஸான நாள் இன்று!

27 years Of Love Today: இளைஞருக்கு வரும் விடாப்பிடியான ஒரு தலைக்காதல்.. இறுதியில் என்ன ஆகிறது என்பதே லவ் டுடே!

HBD Sai Pallavi : மலர்.. சிம்பிள் என்றாலே இவர் தான்.. இளைஞர்களின் கனவு கன்னி.. நடிகை சாய் பல்லவி பிறந்த நாள் இன்று!

அந்தவகையில் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் இந்தியாவின் ‘The Elephant Whisperers'ஆஸ்கர் விருதை வென்றது. தமிழ் ஆவண குறும்படமான இந்தப்படத்திற்கு அறிவிக்கப்பட்ட விருதை இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் போட்டியிட்டது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த சிறந்த பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து உள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர்.

முன்னணி இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது .

இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “முதுமலை தம்பதியினர் பற்றிய ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது பெற்ற கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்காவுக்கு வாழ்த்துகள். 

இரண்டு பெண்கள் இணைந்து இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்று தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதன் முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்ற தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. ”என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “ ஆசியா மற்றும் இந்தியாவின் முதல் பாடல் ஒன்று ஆஸ்கர் விருது வென்று வரலாறு படைத்துள்ளது. ஆஸ்கர் விருது வென்ற அற்புதமான சாதனைக்காக ஆர் ஆர் ஆர் திரைப்பட குழுவினர் கீரவாணி, சந்திரபோஸ், கால பைரவா , ராகுல் சிப்ளிகஞ்ச் , நாம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ராஜமௌலி அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.