தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Al Udhaya: ‘எல்லாத்தையும் இழந்துட்டேன்.. வலி.. வலி.. வலி.. முடியல’ நடிகர் ஏ.எல்.உதயா வேதனை!

AL Udhaya: ‘எல்லாத்தையும் இழந்துட்டேன்.. வலி.. வலி.. வலி.. முடியல’ நடிகர் ஏ.எல்.உதயா வேதனை!

Jun 03, 2023, 06:00 AM IST

பாசிட்டிவ் ஆன எனர்ஜியை எனக்கு கொடுத்தவர்கள் அனைவரையும் நான் இழந்துவிட்டேன். அம்மா இல்லை, விவேக் சார் இல்ல, மனோ பாலா அண்ணா இல்ல. எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன். (udhayaactor Instagram)
பாசிட்டிவ் ஆன எனர்ஜியை எனக்கு கொடுத்தவர்கள் அனைவரையும் நான் இழந்துவிட்டேன். அம்மா இல்லை, விவேக் சார் இல்ல, மனோ பாலா அண்ணா இல்ல. எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன்.

பாசிட்டிவ் ஆன எனர்ஜியை எனக்கு கொடுத்தவர்கள் அனைவரையும் நான் இழந்துவிட்டேன். அம்மா இல்லை, விவேக் சார் இல்ல, மனோ பாலா அண்ணா இல்ல. எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன்.

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகன், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அண்ணன். இதைக் கடந்து தனக்கான அடையாளத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் நடிகர் ஏ.எல்.உதயா. தன்னுடைய திரையுல பயணமும், அதில் அவர் சந்தித்த தோல்விகள் குறித்தும் அவர் யூடியூப் ஒன்றுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

ட்ரெண்டிங் செய்திகள்

Kamal Haasan: ‘தோனிய அப்படி கூப்பிடுறதுதான் சரியா இருக்கும்; டிக்சனரி புரட்டி புதுபெயர் கொடுத்த கமல்!-இது நல்லா இருக்கே!

Karthigai Deepam: ‘பக்கவாக காய் நகர்த்தும் ஐஸ்வர்யா.. கார்த்தியை தாரை வார்க்கும் தீபா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

HBD Actor Murali: இதயம் நிறைந்த நாயகன்..காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி பிறந்தநாள் இன்று!

29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’

‘‘ஜூலையில் அம்மா இறந்தார். ஓராண்டு ஆகப்போகிறது. எப்படி இத்தனை நாட்கள் போனது என்றே தெரியவில்லை. என் மீதும், தம்பி, தங்கை மீது ரொம்ப பாசமா இருந்தாங்க.  உடல்நிலை சரியில்லாமல் இருந்தாங்க, காப்பாற்றி விடலாம் என்று நினைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக அவர் எங்களிடமிருந்து பிரிந்தார். 

பெற்றோர் இல்லாத போது கொண்டாடுவதை விட, அவர்கள் இருக்கும் போது கொண்டாட வேண்டும். நான் பல தோல்விகளை சந்தித்த போது, நீ கட்டாயம் ஜெயிப்ப என்று அம்மா தான் சொல்வார். எனக்காக அவர் போகாத கோயில் இல்லை. பிரார்த்தனை இல்லை. இறப்பிற்கு முன் என்னோட வெற்றியை பார்க்க வேண்டும் என்று நினைத்தார். அந்த வெற்றியை அவர் பார்க்கவில்லை என்கிற ஏக்கம் என்னிடம் உள்ளது. 

நிறைய தோல்விகளை பார்த்து, நிறைய ஏமாற்றங்களை பார்த்து எனக்கு இப்போது அதுவே பழகிவிட்டது. நெகட்டிவ்வாவே சில விசயங்கள் நமக்கு நடக்கும் போது, மற்றவர்களுக்கு பாசிட்டிவா நடக்கும் போது, அதை பார்க்கும் போது, ஒருவித வருத்தம் இருக்கிறது. போக போக போக அதுவே இப்போ பழகிடுச்சு. எந்த நேரத்தில் நல்லது நடக்கும் என்பதே தெரியவில்லை.

நடிகனாக வராமல் இருந்திருந்தால் , நடிகனாக வர முயற்சி செய்து கொண்டிருப்பேன். என் வாழ்க்கை சினிமாவில் தான் இருந்திருக்கும். மனோபாலா எனக்கு சகோதரர் மாதிரி. தினமும் 4 முறையாவது அவரும் நானும் பேசுவோம். எனக்கு பெரிய பாசிட்டிவ் எனர்ஜி அவர். அவருடைய இறப்பில் நான் உடைந்து போய்விட்டேன்.  நாங்கள் இருவரும் தான் எல்லா இடத்திற்கும் போவோம். 

இறப்பிற்கு 4 நாட்களுக்கு முன், அவரிடம் இருந்து போன் வரவே இல்லை. வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினேன் பதில் இல்லை. அதன் பின் தான் அவரின் உதவியாளர், மனோபாலா சார் சிகிச்சையில் இருக்கும் விசயத்தை சொன்னார். அவர் இறந்ததும் எனக்கு தான் முதலில் போன் செய்து சொன்னார்கள். விவேக் சாரும் அப்படி தான். அவரின் நெருங்கிய நண்பர்கள் 7 பேரில், நானும் ஒருவன். நான் ஜெயிக்க வேண்டும் என்று விரும்பியவர் விவேக். பாசிட்டிவ் ஆன எனர்ஜியை எனக்கு கொடுத்தவர்கள் அனைவரையும் நான் இழந்துவிட்டேன். அம்மா இல்லை, விவேக் சார் இல்ல, மனோ பாலா அண்ணா இல்ல. எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன். 

விஜயகாந்த் சார் பெரிய ஆளுமை. சங்கத்தை கடனில் இருந்து மீட்டவர் அவர். கட்டத்தில் அவருடைய பெயர் ஏதாவது ஒரு இடத்தில் வர வேண்டும். எந்த உதவியாக இருந்தாலும் விஜயகாந்த் சார் வீட்டிற்கு போனால் நடக்கும். கேப்டன் என்கிற ஆளுமை, இன்றும் மனதில் நிற்கிறார். 

சினிமா எனக்கு என்ன கொடுத்தது என்பது தெரியவில்லை, நான் இன்னும் அதில் போராடிக் கொண்டு தான் இருக்கிறேன். இதுவரை நான் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதுக்கு நடுவில் நிறைய வலி இருக்கு, மனதில் வலி இருக்கு, இழப்புகள் இருக்கு, துரோகங்கள், நிறைய அவமானங்களை சந்தித்து விட்டேன். பணம் நிறைய விசயத்தை எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டது,’’
என்று அந்த பேட்டியில் உதயா கூறியுள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி