தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  12 Years Of 3 : ராம்-ஜனனி கெமிஸ்ட்ரி.. பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்.. 12 ஆம் ஆண்டில் 3 திரைப்படம்!

12 years of 3 : ராம்-ஜனனி கெமிஸ்ட்ரி.. பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்.. 12 ஆம் ஆண்டில் 3 திரைப்படம்!

Divya Sekar HT Tamil

Mar 30, 2024, 05:45 AM IST

12 years of 3 : ராம்-ஜனனி கெமிஸ்ட்ரி இப்படத்தில் நல்ல வொர்க்கவுட் ஆகி இருக்கும். ஜனனி காதலை எதிர்க்க அவர் வீட்டில் நாடகம் செய்து பிரிக்க முயற்சி செய்யும் விதம் உணர்வு பூர்வமாக இருக்கும்.முதல் பாதி வழக்கமான காதல் கதை போல சென்றாலும், அடுத்த பாதியில் கதை சீரியஸான திருப்பத்தை கொடுக்கும்.
12 years of 3 : ராம்-ஜனனி கெமிஸ்ட்ரி இப்படத்தில் நல்ல வொர்க்கவுட் ஆகி இருக்கும். ஜனனி காதலை எதிர்க்க அவர் வீட்டில் நாடகம் செய்து பிரிக்க முயற்சி செய்யும் விதம் உணர்வு பூர்வமாக இருக்கும்.முதல் பாதி வழக்கமான காதல் கதை போல சென்றாலும், அடுத்த பாதியில் கதை சீரியஸான திருப்பத்தை கொடுக்கும்.

12 years of 3 : ராம்-ஜனனி கெமிஸ்ட்ரி இப்படத்தில் நல்ல வொர்க்கவுட் ஆகி இருக்கும். ஜனனி காதலை எதிர்க்க அவர் வீட்டில் நாடகம் செய்து பிரிக்க முயற்சி செய்யும் விதம் உணர்வு பூர்வமாக இருக்கும்.முதல் பாதி வழக்கமான காதல் கதை போல சென்றாலும், அடுத்த பாதியில் கதை சீரியஸான திருப்பத்தை கொடுக்கும்.

2012 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வெளியான திரில்லர் திரைப்படம் மூனு (3). இந்த திரைப்படத்தை ரஜினி மகள் ஐஸ்வர்யா எழுதி இயக்கியுள்ளார். அதே போல இப்படத்தின் தயாருப்பும் ஐஸ்வர்யா தான். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஷாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல சிவகார்த்திக்கேயன், சுந்தர்ராமு துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ilaiyaraaja: ரஜினி நடிக்கும் ‘கூலி’படத்தில் தனது இசை உரிமைக்காகப் போராடும் இளையராஜா - பதிப்புரிமைச் சட்டம் சொல்வது என்ன?

Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்

Mysskin Vs Parthiban: உடைந்த பனிப்போர்.. 'ஐயா நான் அப்படி சொல்லல’.. இயக்குநர் பார்த்திபனிடம் பம்மிய மிஷ்கின்!

GV Prakash Saindhavi: தமிழர் மாண்பு எங்க போச்சு.. அத்துமீறி நுழைறீங்க... செருப்படி பதில் கொடுத்த ஜிவி!

அதேபோல இப்படத்தில் முதலில் அமலாபால் தான் நடிக்க இருந்தனர். ஆனால் சில முரண்பாடு காரணமாக அமலாபால் மற்றப்பட்டு ஸ்ருதி அந்த ரோலில் நடித்தார். ஆனால் இப்படத்தில் ஸ்ருதி- தனுஷ் கெமிஸ்ட்ரி அவ்வளவு அட்டகாசமாக அமைந்திருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தனுஷுக்காக சிறந்த நடிகர், சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான மூன்று பிலிம்பேர் விருதுகளை பெற்று தந்தது. அதேபோல அனிருத்க்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தது. 2ஆவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் , சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் ஆகிய மூன்று விருதுகளை தனுஷ் வென்றார் . "வை திஸ் கொலவெறி டி" பாடலின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கெளரவ விருந்தினராக அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் தனுஷ் அப்பாவாக பிரபுவும், அம்மாவாக பானுப்பிரியாவும் நடித்து இருப்பார்கள். தனுஷ் சுட்டி பையனாகவும், வீட்டின் செல்ல பிள்ளையாகவும் உள்ளார். ராம் கதாபாத்திரத்தில் தனுஷ், ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். பின்னர் ஸ்ருதி வீட்டிற்கு தெரியவர அவர்கள் ஸ்ருதியை எச்சரிக்கை செய்கிறார்கள். ஒருகட்டத்தில் வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் ஒன்றாக வாழ்க்கையை வாழ தொடங்கும்போது, ​​​​விதி ஒரு கொடூரமான அடியை கொடுக்கிறது.

ராம் இருமுனையப் பிறழ்வு கோளாறால் பாதிக்கப்பட்டு, தீவிர மனநிலை மாற்றத்தால் அவதிப்படுகிறார். ராம் தனது மனைவி ஜனனிக்கு இந்த நோயை எதிர்த்துப் தான் போராடுவது தெரிய கூடாது என நினைத்தார். இதன் பிறகு ராமுக்வுக்கு என்ன மாதிரியான பிரச்சனை நடக்கிறது, ராமுக்கு என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை. இப்படத்திற்கு இசை பெரிய பலம் என்றே சொல்லலாம். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட். படம் வெளியான நாள் முதல் பலரின் காலர் டியூன் இப்படத்தின் பாடலாகதான் இருக்கும்.

அதேபோல ராம்-ஜனனி கெமிஸ்ட்ரி இப்படத்தில் நல்ல வொர்க்கவுட் ஆகி இருக்கும். ஜனனி காதலை எதிர்க்க அவர் வீட்டில் நாடகம் செய்து பிரிக்க முயற்சி செய்யும் விதம் உணர்வு பூர்வமாக இருக்கும்.முதல் பாதி வழக்கமான காதல் கதை போல சென்றாலும், அடுத்த பாதியில் கதை சீரியஸான திருப்பத்தை கொடுக்கும். தனுஷ் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு ஜனனியை விட்டு பிரியமுடியாமல் தவிக்கும் தவிப்பு பார்வையாளர்களுக்கு கண்ணீர் வர வைத்து இருக்கும்.

அனிருத்தின் பிரமாண்ட வெற்றியை விட வய் திஸ் கொலைவெறி , கண்ணழகா உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.ஒரு மகிழ்ச்சியான காதல் கதையோ அல்லது தீவிரமான திரைப்படமோ இல்லை. இப்படம் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி