தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amala Paul: பொருந்தி போகாத நடிகை ரோல்.. விவாகரத்தில் விடிந்த காதல்! - அமலாபால் - விஜய் பிரிந்த கதை

Amala Paul: பொருந்தி போகாத நடிகை ரோல்.. விவாகரத்தில் விடிந்த காதல்! - அமலாபால் - விஜய் பிரிந்த கதை

Kalyani Pandiyan S HT Tamil
Nov 13, 2023 06:12 AM IST

அமலா பால் ஏ.எல் விஜய் பிரிந்த காரணம் குறித்து பத்திரிகையாளர் கோடங்கி பேசி இருக்கிறார்.

அமலா பால்!
அமலா பால்!

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி மிஸ் ஆனது தான் அமலாபாலின் முதல் வாழ்க்கை. அதாவது கல்யாணத்திற்கு முன்னதாக அவருக்கு ஏற்பட்ட சில கமிட்மெண்ட்கள் அவரை அந்த சமயங்களில் பயங்கரமாக போட்டு நெருக்கடிக்கு உள்ளாக்கியது. 

சாதாரணமான பெண்கள் ஒரு வீட்டிற்கு செல்லும் பொழுதே, அங்கு தனக்கான முழு சுதந்திரம் இருக்க வேண்டும். அங்கு தன்னுடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அது நடிகையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று விடுகிறது. 

திருமணம் என்று வந்துவிட்டாலே சில கட்டுப்பாடுகள் நம்மை சுற்றிக் கொள்ளும். பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் அவர்கள் அறியாமலேயே உள்ளே வந்துவிடும். ஆனால் நடிகையாக இருப்பவர்களுக்கு அது பொருந்தாது. அதேபோல தான் அமலா பாலுக்கும் நடந்தது. அமலாபாலால் சில கட்டுப்பாடுகளுக்குள் பொருந்தி போக முடியவில்லை. பொருந்தி போக வேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் சுற்றி இருக்கக்கூடிய கூட்டமானது, வேறு விதமாக சொன்னது. இது, அமலா பாலுக்கு நம்முடைய சுதந்திரம் பறிபோய் விட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்கியது. அதுவே பெரிய இடைவெளியை உருவாக்கியது.”என்று பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்