Bayilvan: சமரசம் செய்து வைத்த ரஜினிகாந்த்.. மீண்டும் இணையும் தனுஷ், ஐஸ்வர்யா? - பயில்வான் சொன்ன ரகசியம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: சமரசம் செய்து வைத்த ரஜினிகாந்த்.. மீண்டும் இணையும் தனுஷ், ஐஸ்வர்யா? - பயில்வான் சொன்ன ரகசியம்

Bayilvan: சமரசம் செய்து வைத்த ரஜினிகாந்த்.. மீண்டும் இணையும் தனுஷ், ஐஸ்வர்யா? - பயில்வான் சொன்ன ரகசியம்

Aarthi Balaji HT Tamil
Mar 27, 2024 07:58 AM IST

தனுஷ், ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணையப் போவதாக சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து உள்ளார் .

தனுஷ், ஐஸ்வர்யா
தனுஷ், ஐஸ்வர்யா

இன்னொரு பக்கம் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஐஸ்வர்யா, தனுஷின் 3 படங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமானார் . 

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிதல் 

பின்னர் வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, 7 வருடங்கள் சினிமா பக்கம் ஒதுங்கி இருந்த நிலையில் , 2022 ஆம் ஆண்டு திடிரென, தானும் நடிகர் தனுஷும் விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக ஐஸ்வர்யா அறிவித்தார். இருவரும் விவாகரத்து செய்து கொண்டதை அறிந்து கொள்ளுங்கள். 

பின்னர் குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டனர். இருப்பினும் பிரிந்து தனித்தனியாக வாழ முடிவு செய்து உள்ளனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, தனுஷுடன் பிரிந்த பிறகு இயக்குநராக ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ரஜினிகாந்த் வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்க கமிட்டாகினார். லைகா நிறுவனம் தயாரித்து உள்ள லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு வேடத்தில் நடித்து உள்ளார். 

கடந்த மாதம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லால் சலாம், 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும், 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் தோல்வியடைந்தது. பயில்வான் ரங்கநாதன், தனுஷ் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணையப் போவதாக சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து உள்ளார் .

திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல்

இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், “ ஆந்திராவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்ய முடிவு செய்து உள்ளதாக கூறினார்கள். மகளின் இந்த எதிர்பாராத முடிவு ரஜினிக்கும் அவரது மனைவி லதாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடும்பம் அவர்களை ஒன்றாக சேர்த்து வைக்க முயற்சிக்கிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் மகன்களுக்காக மீண்டும் இணைய முடிவு செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் விரைவில் இணைவார்கள் என நம்பப்படுகிறது” என்றார்.

லால் சலாம் படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பல தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீடுகளுடன் மோதுவதைத் தவிர்க்க ஒத்திவைக்கப்பட்டது. இப்படத்தில் விக்ராந்த், கபில்தேவ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினிகாந்த் விரைவில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.