தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  ’தென்னிந்தியர்கள் கருப்பர்களா?’ காங்கிரஸ் கூட்டணியை முறிக்க திமுக தயாரா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்

’தென்னிந்தியர்கள் கருப்பர்களா?’ காங்கிரஸ் கூட்டணியை முறிக்க திமுக தயாரா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்

Kathiravan V HT Tamil

May 08, 2024, 06:06 PM IST

”தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தோல் நிறத்தின் அடிப்படையில் எனது நாட்டு மக்கள் அவமதிக்கப்படுவதை கண்டு எனது நாடு பொறுத்துக்கொள்ளாது. இதை மோடியும் ஒருபோதும் பொறுத்துக் மாட்டான் என்றார்”
”தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தோல் நிறத்தின் அடிப்படையில் எனது நாட்டு மக்கள் அவமதிக்கப்படுவதை கண்டு எனது நாடு பொறுத்துக்கொள்ளாது. இதை மோடியும் ஒருபோதும் பொறுத்துக் மாட்டான் என்றார்”

”தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தோல் நிறத்தின் அடிப்படையில் எனது நாட்டு மக்கள் அவமதிக்கப்படுவதை கண்டு எனது நாடு பொறுத்துக்கொள்ளாது. இதை மோடியும் ஒருபோதும் பொறுத்துக் மாட்டான் என்றார்”

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா கூறிய நிலையில் அக்கட்சி உடனான கூட்டணியை முறிக்க தயாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check: 2024 லோக்சபா தேர்தல் பேரணியில் உ.பி துணை முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதா?

HT Exclusive interview: ‘400 இடங்களுக்கு மேல் ஜெயிப்போம் என்ற பாஜக முழக்கத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?’-பிரியங்கா பதில்

Cow Protection: ’மோடி மீண்டும் வென்றால் பசுவை கொலை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’ பீகாரில் அமித்ஷா ஆவேசம்!

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

என்ன சொன்னார் சாம் பிட்ராடோ?

ஓவர்சிஸ் காங்கிரஸ் அமைப்பின் தலைவராக உள்ள சாம் பிட்ரோடா இந்த மாத தொடக்கத்தில் தி ஸ்டேட்ஸ்மேன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், வெவ்வேறு தோல் நிறங்கள் மற்றும் தோற்றம் கொண்ட மக்கள் இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்று கூறினார்.

"அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நாங்கள் 70 முதல் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். 

கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் தோற்றமளிக்கும் இந்தியாவைப் போலவே பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்க முடியும். 

அது ஒரு விஷயமே இல்லை. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்" என சாம் பிட்ராடா கூறி இருந்தார். 

தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்களை போல் உள்ளதாக கூறிய சாம் பிட்ராடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. 

தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தோல் நிறத்தின் அடிப்படையில் எனது நாட்டு மக்கள் அவமதிக்கப்படுவதை கண்டு எனது நாடு பொறுத்துக்கொள்ளாது. இதை மோடியும் ஒருபோதும் பொறுத்துக் மாட்டான் என்றார். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நிறம் காரணமாக அவருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மோடி குற்றம்சாட்டினார்.

தொடந்து பேசிய அவர், “அமெரிக்காவில் 'ஷெஹ்சாதா' (ராகுல் காந்தி) வின் தத்துவ வழிகாட்டியாக ஒரு மாமா இருக்கிறார் என்றும், கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவரைப் போலவே, இந்த 'ஷெஹ்சாதா (ராகுல் காந்தி)' மூன்றாவது நடுவரிடம் ஆலோசனை பெறுகிறார். கருப்புத் தோல் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று இந்த தத்துவ மாமா கூறினார். இதன் பொருள் நீங்கள் நாட்டின் பலரை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தென்னிந்திய மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருப்பதாக காங்கிரஸ் உணர்கிறது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் முதல்வர்களை நான் கேட்க விரும்புகிறேன், அத்தகைய கருத்துக்களை உங்களால் ஏற்க முடியுமா?

தமிழக கலாசாரம் பற்றி தொடர்ந்து பேசும் தமிழ்நாடு முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன், இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது, தமிழர்களின் சுயமரியாதைக்காக காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை திமுக முறித்துக் கொள்ளுமா, அதற்கான தைரியம் உள்ளதா? 

மேற்கு இந்தியாவில் வாழும் மக்கள் அரேபியர்களைப் போல இருப்பதாக காங்கிரஸ் உணர்கிறது, நான் 'போலி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவிடம்' கேட்க விரும்புகிறேன், இதை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?...  என கேள்வி எழுப்பினார். 

சாம் பிட்ராடோ தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், "இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா ஒரு போட்காஸ்டில் வரைந்த ஒப்புமைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக் கொள்கிறது" என கூறினார். 

அடுத்த செய்தி