தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Sara Tendulkar: ‘சுப்மன் கில் நல்லா விளையாடனும். இந்தியா ஜெயிக்கனும்’-சாரா டெண்டுல்கரின் ட்வீட்

Sara Tendulkar: ‘சுப்மன் கில் நல்லா விளையாடனும். இந்தியா ஜெயிக்கனும்’-சாரா டெண்டுல்கரின் ட்வீட்

Manigandan K T HT Tamil

Nov 15, 2023, 11:42 AM IST

google News
சாராவும், கில்லும் காதலித்து வருவதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால், இதுவரை இத்தகவலை இருவருமே உறுதிப்படுத்தவில்லை. (@SaraTendulkar__)
சாராவும், கில்லும் காதலித்து வருவதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால், இதுவரை இத்தகவலை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

சாராவும், கில்லும் காதலித்து வருவதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால், இதுவரை இத்தகவலை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் சுப்மன் கில் நன்றாக விளையாட வேண்டும் என அன்பு கோரிக்கை விடுத்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர்.

ஐசிசி தரவரிசையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து, அவரது புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சாரா டெண்டுல்கர் 'உலகின் நம்பர் 1 ODI பேட்ஸ்மேன் சுப்மன் கில்' என குறிப்பிட்டு இதயம் மற்றும் கிஸ் எமோஜியை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் பதிவை கிட்டத்தட்ட 29 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

சிலர் இது போலி ஐடி எனவும் குறிப்பிட்டுள்ளனர். சாரா டெண்டுல்கர், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் ஆவார். இவர் அவ்வப்போது சுப்மன் கில் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதையடுத்து, இருவரும் காதலிக்கின்றனர் என வதந்தி பரவி வருகிறது.

இந்நிலையில், அரையிறுதி போட்டி தொடங்க இருக்கும் நிலையில் சுப்மன் நன்றாக விளையாட வேண்டும் என்று இதய எமோஜியை பகிர்ந்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் பயனர்கள் சிலர், நியூசிலாந்தை இந்தியா பழிதீர்க்கும். இந்த முறை உலகக் கோப்பை கையில் ஏந்தும் என்று பதிவிட்டுள்ளனர்.

சுப்மன் கில் 8 செப்டம்பர் 1999 அன்று பஞ்சாபின் ஃபசில்காவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, லக்விந்தர் சிங், ஒரு விவசாயத் தொழிலாளி.

சுப்மான் கில் கிரிக்கெட்டில் ஆரம்பகால நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 14 வயதில், விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் பஞ்சாப் அணிக்காக 16 வயதுக்குட்பட்டோருக்கான அறிமுகப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தார். 2014 ஆம் ஆண்டில், அவர் பஞ்சாபின் மாவட்டங்களுக்கு இடையேயான 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 351 ரன்கள் எடுத்தார் மற்றும் நிர்மல் சிங்குடன் 587 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

Google News: https://bit.ly/3onGqm9 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி