தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Shastra: ‘வீடு கட்டும் போது கவனிங்க’ வாஸ்து சாஸ்திரத்தின் பொது விதிகள்

Vastu Shastra: ‘வீடு கட்டும் போது கவனிங்க’ வாஸ்து சாஸ்திரத்தின் பொது விதிகள்

Mar 12, 2023, 12:35 PM IST

வாஸ்து சாஸ்திரத்தின் பொதுவான விதிகள் குறித்து இங்கே காண்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின் பொதுவான விதிகள் குறித்து இங்கே காண்போம்.

வாஸ்து சாஸ்திரத்தின் பொதுவான விதிகள் குறித்து இங்கே காண்போம்.

ஆன்மீகத்தைப் பொறுத்தவரை வாஸ்து சாஸ்திரத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒரு என்னிடம் அமைய வேண்டும் என கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு அல்லது வேலை செய்யும் இடம் சரியாக அமைந்தால் நன்மைகள் பெருகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பொதுவான விதிகளை இங்கே காண்போம்.

சமீபத்திய புகைப்படம்

Today Rasi Palan: ‘நிம்மதி நிரந்தரமா.. மதிப்பு யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 17, 2024 04:30 AM

Barani Nakshatram: ‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 16, 2024 05:07 PM

Love Horoscope Today : உறவில் உள்ள அன்பு ஒருபோதும் குறைய விடாதீர்கள்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு

May 16, 2024 08:37 AM

Today Horoscope : ‘மூலதனம் முக்கியம்.. வீண் செலவுகளை தவிர்க்கவும்’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 16, 2024 06:23 AM

உடலுறவில் அதிக ஆர்வம் காட்டும் ராசிகள் இவர்கள் தானாம்.. காதல் கிரகம் சுக்கிரனால் ஆளப்படுவீர்கள்-ஜோதிடம் என்ன சொல்கிறது?

May 16, 2024 06:00 AM

குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. குபேர யோகம் வருகுது.. பண மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்

May 15, 2024 05:44 PM

குபேர மூலை

தென்மேற்கு பகுதியான குபேர மூலையில் கனமான பொருட்களை வைக்கலாம். அந்த இடம் சாளரம் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் புழக்கம் செய்யும் இடமாக அது இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை அங்கு வைத்துக் கொள்ளலாம்.

ஈசான மூலை

வடகிழக்கு பகுதியான ஈசான மூலை சற்று தாழ்வாக இருந்தால் நன்றாக இருக்கும். கனமான பொருட்களை அந்த இடத்தில் வைக்கக் கூடாது. கடவுள் குடிகொள்ளும் இடம் என்பதால் அங்குச் சுத்தமாக இருக்க வேண்டும் நறுமணம் வீச வேண்டும்.

வாசல்

வீட்டின் தலைவாசல் உச்சத்தில் இருந்தால் நல்லது. வடக்கு, கிழ்க்கு பார்த்த வாசல் மிகவும் நலம் தரும். கட்டடத்தின் அமைப்பானது சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது சிறப்பாகும்.

அப்படி இல்லையென்றால் வடக்கு அல்லது கிழக்குப் பகுதிகளில் சற்று காலியிடம் விட்டு வீடு கட்டலாம். குழந்தைகள் வயதானவர்கள் நேரம் கழிப்பதற்கு ஏற்றவாறு அங்கே இடமிருந்தால் சிறப்பாகும்.

அக்னி மூலை

அக்னி மூலை குறித்து பெரிதான விளக்கம் தேவையில்லை அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த மூலையில் சமையலறை இருக்க வேண்டும். கிழக்கு பார்த்தவாறு சமையல் செய்யும்படி மேடை அமைத்து இருப்பது சிறப்பாகும்.

வாயு மூலை

இந்த வாயு மூலையில் வடமேற்கு பகுதியாகும். இந்தப் பகுதியில் குளியலறை கழிவறைகள் போன்றவை அமைந்திருக்க வேண்டும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி