Tamil News  /  Video Gallery  /  Indian Forces Recover Radio-controlled Ieds Used Against Nato From Let Hideout In Kashmir

லஷ்கர்-இ-தொய்பா மறைவிடம் கண்டுபிடிப்பு! போர்க்கு தேவையான ஆயுதங்கள் பதுக்கல்

14 March 2023, 19:27 IST Muthu Vinayagam Kosalairaman
14 March 2023, 19:27 IST
  • Lashkar-e-Taiba Hideout Identified: ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியினர் பதுங்கியிருப்பது ராணுவத்தினரால் கண்டறிப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து மிகப் பெரிய அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் 5 IEDக்கள், புரோகிராம் செய்யப்பட்ட டைமர் சாதனங்கள் (PTDs) ரேடியோவால் கட்டுப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் (RCIED), ஆறு டெட்டனேட்டர்கள், மூன்று கைத்துப்பாக்கிகள், ஐந்து பிஸ்டல்கள், 124 ஒன்பது-மிமீ குண்டுகள், நான்கு ரிமோட் கண்ட்ரோல்கள் மற்றும் 13 பேட்டரிகள் ஆகியவை உள்ளன. மொத்தத்தில் ஒரு சிறிய போர் செய்வதற்கான பொருள்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட திடீர் தேடுதல் வேட்டையில் மேற்கூறிய பொருள்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறான போர் நிகழும்போது கொரிலா படை தாக்குதலில் ஈடுபட நேரிட்டால் RCIEDக்கள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவுக்கு எதிராக ஈராக்கில் நடைபெற்ற போர், ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்களால் நிகழ்த்தப்படும் தாக்குதலில் RCIED அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
More