தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எங்களை ஸ்ரீதர்வேம்பு கைவிட்டு விட்டார்! Zoho நிறுவனர் மீது மனைவி பரபரப்பு புகார்

எங்களை ஸ்ரீதர்வேம்பு கைவிட்டு விட்டார்! Zoho நிறுவனர் மீது மனைவி பரபரப்பு புகார்

HT Tamil Desk HT Tamil
Mar 14, 2023 11:39 AM IST

நான் அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கு பண ரீதியாக உதவிகள் செய்யாமல் இல்லை-ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

ஸ்ரீதர் வேம்பு - சோஹோ நிறுவன தலைவர்
ஸ்ரீதர் வேம்பு - சோஹோ நிறுவன தலைவர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்ரீதர் வேம்பு

சென்னையில் சோஹோ நிறுவனத்தை நடத்தி வரும் ஸ்ரீஇதர் வேம்பு தமிழ்நாட்டின் பல்வேறு சிறிய நகரங்களில் தனது நிறுவனங்களை தொடங்க உள்ளார். கிராம புற பகுதிகளில் தொழில்நுட்பத்தை கொண்டுபோய் சேர்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இவரது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆதரவு கருத்துக்கள் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சோஹோ நிறுவனத்தை நடத்தி அவரது மனைவி பிரமிளா சீனிவாசனுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தார். தென்காசி மாவட்டம் மதளம்பாறை கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனைவி புகார்

இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் ஸ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா சீனிவாசன் அளித்துள்ள புகார் தொடர்பான விவரங்களை போர்ப்ஸ் நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் “என் கணவருடன் நான் 29 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தேன். அவர் இப்போது என்னை கைவிட்டுவிட்டார். 

என் கமனுக்கு உடல்ரீதியாக சில பாதிப்புகள் உள்ளன. ஆனால் எங்களை ஸ்ரீதர் கவனிக்கவில்லை என்று கூறி உள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எங்களுக்கு என்று பொதுவாக இருந்த சில சொத்துக்களை, சில பங்குகளை எனது அனுமதியின்றி தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார். முறையின்றி இதை செய்துள்ளார்.”

”முறையின்றி சொத்துகளை மாற்றி உள்ளார்”

“எனக்கு தேவையான தொகையை கொடுக்கவில்லை. என்னிடம் கேட்காமல், என்னிடம் சொல்லாமல் முறையின்றி சொத்துக்களை மாற்றி உள்ளார். கலிபோர்னியாவில் உள்ள குடும்ப சொத்து சட்டம், திருமணத்தின் போது கணவன் - மனைவி தங்கள் இணையின் ஒப்புதலை பெறாமல் ரகசியமாக சொத்துக்களை மாற்ற முடியாது. குடும்ப சொத்து என்பது கூட்டு சொத்து என்று கூறப்பட்டுள்ளது. இதனை மீறி ஸ்ரீதர் வேம்பு சொத்துக்களை குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.”

ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார், அதில் “”நான் யாருக்கும் எந்தப் பங்குகளையும் மாற்றவில்லை, மேலும் என் நிறுவனங்களில் எனது நிதி ஆர்வம் எப்போதும் குறையவில்லை. கிராமப்புற மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்காக என்னை ஆர்பணிப்பதற்ஆக நான் இந்தியாவுக்கு சென்றேன். 

மற்றபடி இதில் வேறு எதுவும் காரணம் இல்லை. நான் பிரமிளாவை தமிழ்நாடு வர சொன்னேன், அவர் வரவில்லை. என் மகனும் இதனால் அங்கேயே இருக்கிறார். நான் அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கு பண ரீதியாக உதவிகள் செய்யாமல் இல்லை என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்