தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கோலாகலமாக முடிந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..18 காளைகளை அடக்கி காரை வென்ற கார்த்திக்!

கோலாகலமாக முடிந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..18 காளைகளை அடக்கி காரை வென்ற கார்த்திக்!

Karthikeyan S HT Tamil
Jan 17, 2024 07:05 PM IST

Alanganallur Jallikattu 2024: தைப்பொங்கலை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 6099 காளைகளும், 1784 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். போட்டி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து சுற்றுகள் நீடித்து வந்ததால், மாலை 6 மணி வரை போட்டி நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடத்தி முடிக்கப்பட்டு, மாலை 6.15 மணிக்கு நிறைவு பெற்றது.  போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு பைக் மற்றும் பீரோ, கட்டில் டிவி, சைக்கிள், தங்க காசு போன்ற பரிசுகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினரால் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் முதல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.

17 காளைகளை அடக்கிய பூவந்தி அபிசித்தர் 2-வது இடம் பிடித்துள்ளார். 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்தில் உள்ளார்.இதேபோன்று, போட்டியில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 83 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்