தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp: ’தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டம் தடை செய்கிறது’ நீதிபதிகள் கேள்வி

BJP: ’தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டம் தடை செய்கிறது’ நீதிபதிகள் கேள்வி

Kathiravan V HT Tamil
Nov 07, 2023 12:19 PM IST

”தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் வழக்கு”

தாமரை சின்னம் - சென்னை உயர்நீதிமன்றம்
தாமரை சின்னம் - சென்னை உயர்நீதிமன்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோசியல் கட்சி நிறுவனருமான ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு ரத்து செய்ய வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்து இருந்தாகவும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கங்கா பூர்வாலா, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்குவது எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது என கேள்வி எழுப்பி இருந்தனர்.

சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் உள்ளதாகவும், இது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவைப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். சின்னம் ஒதுக்கீட்டில் உள்ள விதிமீறலை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்காவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், இது விளம்பர நோக்கத்துடன் போடப்பட்ட வழக்குபோல் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்