தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  We Will Expose Bjp's Betrayal Of Tamil Nadu - Aiadmk Ex-minister Jayakumar

ADMK vs BJP: ’அண்ணாமலை போல் ஊளைக்கும்பிடு போடல! பாஜகவின் துரோகங்களை அம்பலப்படுத்துவோம்!’ ஜெயக்குமார் ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Jan 29, 2024 01:30 PM IST

”ADMK vs BJP: மத்தியில் இருந்து துரோகம் செய்தவர்களை அடையாளம் காட்டுவோம். பாஜகவினர் கடந்த 10 ஆண்டு காலங்களில் நமது மாநில நலனை என்னென்ன புறக்கணித்தார்கள் என்பதை அம்பலப்படுத்துவோம்”

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில்,  தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. அந்த பெட்டியை கழற்றிவிட்டாகிவிட்டது. அதனை மீண்டும் எஞ்சின் உடன் இணைக்கும் திட்டம் இல்லை என்றார். 

பாமக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்ற கேள்வுக்கு,  கொள்கை முடிவை நான் கூற முடியாது. தேர்தல் நேரத்தில் பலர் எங்களோடு பேசுகிறார்கள் அது குறித்து பேச இது நேரம் இல்லை. என்றார், 

அதிமுகவினர் டெல்லிக்கு சென்று பாஜக தலைமையினரின் காலில் விழுந்ததாக அண்ணாமலை கூறிய கருத்து குறித்த கேள்வுக்கு பதில் அளித்த அவர், இது ஒரு கற்பனை கதை. அண்ணாமலையை பொறுத்தவரை தன்னை முன்னிலைப்படுத்துகிறார். அவரை பொறுத்தவரை நடக்காத விஷயத்தை சொல்லி திசைத்திருப்புவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் அண்ணாமலை போல ஊளைக்கும்பிடு போடும் ஆள் இல்லை என்றார். 

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்கு, 2016 தேர்தலில் அம்மா நாடாளுமன்றத் தேர்தலை தனியாக சந்தித்து வென்றார்கள். எங்கள் நிலைப்பாடு மாநில உரிமை சார்ந்த விஷயம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது. 

யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டி உரிமையை பெற்றுத் தருவதுதான் அதிமுகவின் கொள்கை

அதிமுகவை பொறுத்தவரை மாநிலத்தின் நலனை புறக்கணிப்பவர்களை அடையாளம் காட்டுவோம். மத்தியில் இருந்து துரோகம் செய்தவர்களை அடையாளம் காட்டுவோம். பாஜகவினர் கடந்த 10 ஆண்டு காலங்களில் நமது மாநில நலனை என்னென்ன புறக்கணித்தார்கள் என்பதை அம்பலப்படுத்துவோம் என ஜெயக்குமார் கூறினார். 

WhatsApp channel