தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vaiko: செந்தில் பாலாஜி இலாகா விவகாரம்.. ஆளுநரின் அதிகப்பிரசங்கி தனம் அயோக்கியதனம் - வைகோ கடும் விமர்சனம்

Vaiko: செந்தில் பாலாஜி இலாகா விவகாரம்.. ஆளுநரின் அதிகப்பிரசங்கி தனம் அயோக்கியதனம் - வைகோ கடும் விமர்சனம்

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 16, 2023 11:28 AM IST

Senthil Balaji portfolio issue Vaiko strongly criticizes the governor's over-preachy nonsense

வைகோ செய்தியாளர் சந்திப்பு
வைகோ செய்தியாளர் சந்திப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று மாலை போராட்டம் நடைபெற உள்ளது.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஈவு இரக்கமற்ற , மூர்க்கத்தனமான தான்தோற்றிதனமான காரியங்களை செய்கின்ற

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆட்டம் போட்டு வருகின்றார். முதல்வருக்குதான் யாரை அமைச்சராக்க வேண்டும் என்ற அதிகாரம் உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை பிரித்து கொடுத்து இருப்பதை ஏற்று கொள்ள முடியாது என ஆளுநர் சொல்லி இருப்பது அதிக பிரசிங்கதனமானது, அயோக்கியதனமானது என காட்டமாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் இந்த ஆளுநர் இருக்கின்ற வரையில் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைக்க முடியுமா, ஆட்சியை எப்படி சீர் குலைக்க வைக்க முடியுமா என்று செயல்படுகிறார்.

பி.ஜே.பியின் ஏஜென்டாக, உளவாளியாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார், அவருக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என தெரிவித்த அவர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது போல ஆளுநர் செயல்படுகிறார்,

மக்கள் தேர்வு செய்தது தளபதி ஸ்டாலினைதான். ஆர்.என்.ரவியை இல்லை.

ஆளுநர் ரவி மத்திய அரசின் ஒரு வேலைக்காரர், ஏஜென்ட். அவ்வளவுதானே தவிர முதல்வரல்ல. ஒன்றிய அரசு அனைத்து இடங்களிலும் பிஜேபியை கொண்டு வந்து கைப்பற்ற நினைக்கின்றனர்,

சர்வாதிகார்தை நிலைநாட்ட மோடி அரசு முயற்சிக்கிறது, அதில் தோற்றுப் போவார்கள் என கடும் காட்டமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

முன்னதாக அமலாக்கத்துறையின் ரெய்டு நடவடிக்கையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் செந்தில் பாலாஜி வசமுள்ள இரு துறைகளை வேறு இரு அமைச்சர்களுக்கு மாற்றி அமைத்துள்ளோம் என முதலமைச்சர், ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.'

செந்தில் பாலாஜியின் இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிய தமிழக முதல்வரின் பரிந்துரையை நிராகரித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்