தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mdmk: ’மதிமுகவின் 30ஆம் ஆண்டு ஒளிதரும் ஆண்டாக அமையும்’ வைகோ நம்பிக்கை

MDMK: ’மதிமுகவின் 30ஆம் ஆண்டு ஒளிதரும் ஆண்டாக அமையும்’ வைகோ நம்பிக்கை

Kathiravan V HT Tamil
May 06, 2023 11:40 AM IST

ஆர்.என்.ரவி. அவர் பாஜகவின் ஏஜெண்டாக இருக்கலாமே தவிர; ஆளுநர் பதவிக்கு ஆர்.என்.ரவி பொறுத்தமற்றவர் - வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - கோப்புபடம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய அவர், தந்தை பெரியாரின் தன்மான உணர்வையும், பேரறிஞர் அண்ணாவின் தமிழின உணர்வையும் கொண்டவர்களாக 1994ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா காஞ்சியில் தொடங்கிய மறுமலர்ச்சி மன்றத்தை நினைவூட்டும் வகையில் பெயர்சூட்டி 29ஆண்டுகளை கடந்து மதிமுக பீடுநடை போடுகிறது.

மதிமுக இன்னும் எண்ணற்ற வெற்றிகள் பெற்று, வருகின்ற சோதனைகளை முறியடித்து, கழகம் வெற்றிக்குண்டத்தின் உயரத்தில் புகழ்க்கொடி உயர்த்தும்.

இந்த 30ஆம் ஆண்டு இயக்கத்திற்கு ஒளிதரும் ஆண்டாக, புதுவாழ்வு தரும் ஆண்டாக, உண்மையான மறுமலர்ச்சிக்கு தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையோடு இதனை கொண்டாடுகிறோம்.

கேள்வி:- திராவிட மாடல் காலாவதி என ஆளுநர் கூறி உள்ளாரே?

காலாவதியாகிபோன மனிதர், போலீஸ் துறையில் ஓய்வு பெற வேண்டிய மனிதர் தமிழ்நாட்டில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார். உலறலுக்கு மேல் உலறிக் கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. அவர் பாஜகவின் ஏஜெண்டாக இருக்கலாமே தவிர; ஆளுநர் பதவிக்கு ஆர்.என்.ரவி பொறுத்தமற்றவர்.

கேள்வி:- திமுக 2 ஆண்டு ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்?

இதுவரை இருந்த ஆட்சிகளிலேயே உயர்ந்த சிறப்புகளை கொண்ட ஆட்சியாக, அனைத்து தரப்பு மக்களின் ஆவலை பூர்த்தி செய்யும் ஆட்சியாக வெற்றிகரமாக திராவிட மாடல் ஆட்சி ஸ்டாலின் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: சொத்துக்கணக்கை காட்ட வேண்டும் என்று அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி சொல்லி உள்ளாரே?

துரைசாமி தெரியாமல் சொல்கிறார். ஆடிட்டர் பார்த்து வருமானவரித்துறைக்கு கணக்குகள் சமர்பிக்கப்பட்டு வருகிறது. அவர் வேண்டுமென்றே கசப்பை கொடுக்கிறார். எந்த கட்சி சொத்துப்பட்டியல் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கேள்வி:- திராவிட மாடலை பார்த்து பாஜக அஞ்சுகிறதா?

திராவிட மாடல் என்று சொன்னாலே அலர்ஜியாக உள்ளது. அந்த அச்சமும், நாணமும், கூச்சமுமே என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே ஆளுநர் உளறிக்கொண்டிருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்