தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc: டிஎன்பிஎஸ்சி குளறுபடி..புதிய தேர்வு நடத்த வேண்டும்-டிடிவி தினகரன் கண்டனம்

TNPSC: டிஎன்பிஎஸ்சி குளறுபடி..புதிய தேர்வு நடத்த வேண்டும்-டிடிவி தினகரன் கண்டனம்

Divya Sekar HT Tamil
Feb 25, 2023 02:02 PM IST

குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

ட்ரெண்டிங் செய்திகள்

அவர்களுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

காலையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், மதியத்தில் பொதுத்தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் காலையில் நடைபெற்ற தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் தேர்வு சரியான நேரத்தில் துவங்கவில்லை.

இதனால் தேர்வர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல மைங்களிலும் இதே குழப்பம் ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் பார்சலில் சீரியல் எண்கள் மாறிவிட்டாதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மையத்திலும் எவ்வளவு நேரம் தாமதமாகிறதோ அவ்வளவு கூடுதல் நேரம் வழங்கப்படும். சில மையங்களில் சிக்கல் சரிசெய்யப்பட்டு தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. சில மையங்களில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம் என அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் குளறுபடி என்ற செய்தி 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வில் சென்னை, திருச்சி உள்ளிட்ட தேர்வு மையங்களில் பதிவெண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலட்சியமாக செயல்பட்டதே குளறுபடிக்கு காரணம் என தேர்வர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை எனும் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.”என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்