தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tnpsc Result Announcement And Other Trending News For Tamil Nadu, September 29, 2022

TNPSC Result: டிஎன்பிஎஸ்சி ரிசல்ட், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு (செப்.29)

Karthikeyan S HT Tamil
Sep 29, 2022 06:47 PM IST

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை, பெருமாள்பதி கோயில் தடுப்பணையில் குளிக்கும் போது, மூழ்கிய 11ஆம் வகுப்பு மாணவர் நவீன் குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருத்தணியில் நீண்ட நேரம் தூங்கியதால் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியை, கோபத்தில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மேற்கு காவல் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை, விராலிமலை அருகே கடந்தாண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குழந்தை வேலு என்பவருக்கு ஆயுள் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நள்ளிரவில் சாக்லேட் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி 2 கிலோ அளவிலான சாக்லேட்டை ருசிபார்த்தது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் விதமாக அபராதத் தொகையை ரூ.1550-இல் இருந்து ரூ.3000 ஆக மாநகராட்சி உயர்த்தியுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை வனப்பகுதியில் வன பாதுகாவலரை தாக்கிய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் மூலம் அரசு இயந்திரத்தில் இளைய, புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக கருதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலகத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், மாநில அரசை கலைத்தால் என்ன என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளாா்.

குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி ஆகாஷ் உயிரிழந்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான்; நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது என்று சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மேயர் பிரியா தலைமையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அக்டோபர் 2ஆம் தேதி அனுமதி கோரப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம், வி.சி.க., மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது

IPL_Entry_Point

டாபிக்ஸ்