தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டிஎன்பிஎஸ்சி குளறுபடி : மதிய தேர்வுகள் 2.30 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குளறுபடி : மதிய தேர்வுகள் 2.30 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு

Priyadarshini R HT Tamil
Feb 25, 2023 12:58 PM IST

TNPSC Exam: இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு மையங்களில் வினாத்தாள் பார்சலில் சீரியல் எண் மாற்றம் ஏற்பட்டதால் குளறுபடி நடந்துள்ளது. இதனால் காலையில் தேர்வுகள் பல இடங்களில் தாமதமாக துவங்கின. இதனால் மதிய தேர்வுகளும் தாமதமாக 2.30 மணிக்கு துவங்கும்.

திருச்சியில் ஒரு மையத்தில் நடைபெறும் தேர்வை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்கிறார்.
திருச்சியில் ஒரு மையத்தில் நடைபெறும் தேர்வை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

காலையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், மதியத்தில் பொதுத்தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் காலையில் நடைபெற்ற தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் தேர்வு சரியான நேரத்தில் துவங்கவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல மைங்களிலும் இதே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் பார்சலில் சீரியல் எண்கள் மாறிவிட்டாதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் எவ்வளவு நேரம் தாமதமாகிறதோ அவ்வளவு கூடுதல் நேரம் வழங்கப்படும். சில மையங்களில் சிக்கல் சரிசெய்யப்பட்டு தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. சில மையங்களில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கமாக காலையில் 10 மணிக்கு துவங்கி தேர்வுகள் 12.30 மணிக்கு முடிவடையும். இந்நிலையில் வினாத்தாள் குளறுபடிகளை தொடர்ந்து தேர்வுகளுக்கு கூடுதலாக அரை மணிநேரம் வழங்கப்பட்டது. இதனால் காலை தேர்வுகளே 1 மணிக்குதான் முடியும். அதனைத்தொடர்ந்து மாணவர்கள் உணவருந்திவிட்டு வருவதற்கு ஏதுவாக 2 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதும் தேர்வுகள் 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணிக்கு முடிவடையும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்