தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Engineering Admission : மாணவர்களே அலர்ட் : Part Time பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கலாம்

TN Engineering Admission : மாணவர்களே அலர்ட் : Part Time பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கலாம்

Priyadarshini R HT Tamil
Jun 28, 2023 11:45 AM IST

TN Engineering Admission : தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் படிப்புக்கு, இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இளநிலை பொறியியல் படிப்புக்கு சுமார் ஒன்றரை லட்சம் இடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு 2018ம் ஆண்டு முதல் இணைய வழியில் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விரைவில் துவங்கவுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பபதிவு மே மாதம் 5ம் தேதி தொடங்கி கடந்த 5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவுசெய்து, அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் 6ம் தேதியே வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய ரேண்டம் எண்ணை www.tneaonline.org இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

பின்னர் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் 20ம் தேதி வரை நடைபெற்றது. அடுத்தாக தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு நேரடி சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேரடி வகுப்புகளில் சேர முடியாதவர்கள் பகுதிநேர படிப்புகளிலும் சேர்ந்து படித்து பயன்பெற முடியும்.

பல்வேறு காரணங்களால் சில மாணவர்களால் நேரடி வகுப்புகளுக்கு செல்ல முடிவதில்லை. அவர்கள் இதுபோன்ற பகுதிநேர படிப்புகளில் சேர்ந்து பயன்பெற முடியும். பொறியியல் கல்லூரியைப் பொறுத்தவரை அரசே இதுபோன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. எனவே மாணவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் படிப்புக்கு, இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். www.ptbe.tnea.com என்ற முகவரியில் வரும் ஜீலை 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்